சிவப்பு சிலிண்டர்.. வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் ஏன் ரெட் கலரில் இருக்கு தெரியுமா..ஓஹோ, இதான் விஷயமா
சென்னை: கேஸ் சிலிண்டர்களின் பயன்பாடுகள் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனினும், சிலருக்கு எப்படி கேஸ் சிலிண்டரை பயன்படுத்த வேண்டும் என்பது அறியாமல் உள்ளனர். அதற்கான குட்டி டிப்ஸ்தான் இது:
கேஸ் சிலிண்டர்கள்: எப்போதுமே, கேஸ் சிலிண்டரை தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்கும்படி வைக்க வேண்டும்.. பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டும்.

இதில் பெரிதும் கவனம் செலுத்துவது, ரப்பர் குழாய்கள் விஷயத்தில்தான்.. ஐஎஸ்ஐ முத்திரை உள்ள அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவிட்டு, அதற்கு பிறகே வால்வை மூடுவது நல்லது.
சிலிண்டர் வால்வுகள்: அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு, சிலிண்டரை மாற்ற வேண்டும்.. ஏதாவது பழுது என்றால் நாமே அதை சரிசெய்ய முயற்சிக்க கூடாது.. அதேபோல, கேஸ் உபகரணங்களை ரிப்பேர் செய்வதற்காக, வேறு யாரையும் அனுமதிக்கவும் கூடாது. விற்பனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும். முக்கியமாக மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். கரண்ட் சம்பந்தமாக எதுவும் இயங்கக் கூடாது.
கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாக கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும்... சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து கேஸ் கசிவை தடுக்கும்.
ஆபத்து: ஆனால், அனைத்து கேஸ் சிலிண்டர்களுமே சிவப்பு நிறத்தில் உள்ளதே.. ஏன் தெரியுமா? சிவப்பு என்பது ஆபத்தை குறிக்கக்கூடியது.. ஆபத்து உள்ள இடங்களிலெல்லாம் சிவப்பு நிறத்தில் ஏதாவது சிக்னலை பயன்படுத்துவது வழக்கம்.. துணி அல்லது பலகை இப்படி பயன்படுத்தப்படுகிறது. இந்த கலரை பார்த்ததுமே, ஆபத்து உள்ளது என்பதை பலரும் அறிந்து கொள்வதுடன், கவனமாகவும் இருக்க உதவும்..
கேஸ் சிலிண்டரும் ஆபத்தான ஒன்றுதான்.. சிறிய அளவு கசிவு என்றாலும், பெருத்த நஷ்டத்தை தந்துவிடும்.. அதனால்தான், சிவப்பு நிறம் கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், தொலைவான தூரத்தில் இருந்து பார்த்தாலும், சிவப்பு நிறம் பளிச்சென தெரியும். அதனால்கூட, சிவப்பு நிறம் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.. இந்த சிவப்பு நிறத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டவே, வணிக பயன்பாடு சிலிண்டருக்கு நீலநிறம் தரப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications