உங்க வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கா? கசிந்த கேஸ்.. பற்றிய தீ! ரொம்ப கவனமாக இருக்கனும்! பரபர வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகள் மற்றும் கடைகளில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை மிக கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது. திடீரென சிலிண்டரில் இருந்து கேஸ் வேகமாக வெளியேறிய நிலையில் அடுப்பிலிருந்து தீப்பற்றி வெடிப்பு ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வீடுகளில் விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கேஸ் சிலிண்டர்கள் தான் வீடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கடைகள், ஹோட்டல்களிலும் கேஸ் சிலிண்டர்கள் தான் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனால் நேரமும் மிச்சமாகிறது.

அதே நேரத்தில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் போது மிக கவனமாக இருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர் காலாவதி தேதியை கடந்து விட்டதா? கேஸ் கசிவு இருக்கிறதா? கேஸ் பைப் உள்ளிட்டவை சரியாக இயங்குகிறதா? என அடிக்கடி சோதிக்க வேண்டும்.

chennai Gas Cylinder Video

மேலும் கேஸ் அடுப்புகளையும் அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டும் அல்லது புதிதாக மாற்றுவது நல்லது. இல்லையென்றால் பெரும் விபத்துகள் ஏற்படும். பல நேரங்களில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்துகள் ஏற்படுவதை பார்த்திருப்போம். மேலும் தீ விபத்துகளால் சிலிண்டர் வெடித்து மிகப்பெரிய அளவிலான சேதமும் ஏற்படும். எனவே கேஸ் சிலிண்டர்களை கையாளும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தற்போது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அது எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. அதே நேரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. வீட்டில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் போது அதனை ஒரு பெண் திறந்து விட்டிருக்கிறார். சிலிண்டர் கீழே விழுந்து ஹோசில் இருந்து கேஸ் வேகமாக வெளியேறுகிறது. இதனால் பதறிப் போன பெண் அந்த வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

சிறிது நேரம் கேஸ் முழுவதும் வெளியேறிய நிலையில் இளைஞர் ஒருவர் அந்த சிலிண்டரை அணைக்க வந்தபோது வீட்டின் அடுப்பில் இருந்து தீப்பற்றி பெரும் வெடிப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அந்த அறையின் கதவு ஜன்னல் ஆகியவை திறந்து இருந்ததால் கேஸ் ஓரளவு வெளியேறிவிட்டது. இதனால் அந்த பெண்ணும் இளைஞரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஒருவேளை காற்றோட்டம் இல்லாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டிருக்கும்.

வீடியோவை உற்றுக் கவனிக்கும் போது கேஸ் சிலிண்டரின் ஹோசை இணைக்காமல் அந்தப் பெண் சிலிண்டரை திறந்து உள்ளார். அப்போது மிக வேகமாக கேஸ் வெளியேறியதால் அந்த பெண் பதட்டத்தில் வெளியேறிய நிலையில், அறை முழுவதும் கேஸ் பரவிய நிலையில் வீட்டின் அடுப்பிலிருந்து தீ பற்றி வெடிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வ்ரும் நிலையில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர். மேலும் சிலிண்டரில் அல்லது அடுப்பில் ஏதாவது கோளாறு இருந்தால் உடனடியாக இது குறித்து கேஸ் சர்வீஸ் செய்யும் நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+