கடைசி கட்ட தேர்தல் நாளில் வந்த சூப்பர் செய்தி.. வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!
சென்னை: வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்து ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 காசுகள் குறைந்தது. இதன் மூலம் சென்னையில் 1,930.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர். அதைத்தொடர்ந்து கடந்தே மே 1ஆம் தேதி மேலும் 19 ரூபாய் குறைந்து, ரூபாய் 1,911க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மேலும் ரூபாய் 70.50 குறைந்து தற்போது, 1,840.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூபாய் 818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் எனத் தெரிவித்த பிரதமர் மோடி சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின் குறிப்பாகப் பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகளில் பெட்ரோலிய பொருட்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாகவும் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக் குறைவின் பின்னணியில் உள்ள துல்லியமான காரணங்கள் வெளியிடப்படாத நிலையில், சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள், வரிவிதிப்புக் கொள்கைகளில் மாற்றங்கள் மற்றும் தேவை போன்ற பல்வேறு காரணிகள் இந்த விலை மாற்றத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications