வீட்டு கேஸ் சிலிண்டர்களில் வந்த மாற்றம்.. இனிமேல் இதை செய்தே ஆகணுமாம்.. லிஸ்ட்டும் இருக்கு.. சூப்பர்
சென்னை: கேஸ் சிலிண்டர்கள் குறித்து, முக்கிய அதிரடியை இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.. இதற்கான சலுகை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை, நுகர்வோர்களின் வசதிக்காக அறிவித்து வருகிறது. அந்தவகையில், இந்த ஒரே மாதத்தில் மட்டும் 2 வகையான அறிவிப்புகளை வெளியிட்டு, நுகர்வோர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருந்தது.

முதலாவதாக, 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய, அயர்ன்பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டது.. இந்த அயர்ன் பாக்ஸ்கள், வெறும் 2 நிமிஷங்களிலேயே சூடாகிவிடுமாம்..
சமையல் கேஸ்: வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவது போலவே, தள்ளுவண்டியில் பாதுகாப்பாக இந்த அயர்ன்பாக்ஸை பயன்படுத்த முடியும் என்றும், கரியை எரிப்பதால் வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடு போன்றவற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பும் ஏற்படாது என்றும் இந்த நிறுவனம் சார்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.
எனவே, இத விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது.. அதேபோல, வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும்கூடிய, சமையல் காஸ் சிலிண்டர்களை, இதே நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், இரண்டிற்கும் ஒரே வகையான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு: இவைகளில், வீடுகளுக்கான ரெகுலேட்டர், ரப்பர் குழாயை, இந்தியன் ஆயில் நிறுவனமே விற்பனை செய்கிறது.. அவை அதிக பாதுகாப்புடன் தரமாக உள்ளன என்றாலும், வீடுகளுடன் ஒப்பிடும்போது, வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் சற்று அதிகமாகும்..
எனவே, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு சந்தையில் கிடைக்கும் ரெகுலேட்டர், ரப்பர் குழாய்களை பயன்படுத்துவதால், அவை தரமற்று இருப்பதாகவும், இதன்காரணமாக நிறைய விபத்துக்களை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான், வணிக சிலிண்டருக்கும், புது ரெகுலேட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது..
தனியாக உயர் அழுத்த மாறுபாடுகளை தாங்கும் திறனில் இந்த ரெகுலேட்டர்கள் உள்ளதுடன், புதிதாக ரப்பர் குழாயையும், இந்த நிறுவனம் அறிமுகம்செய்ய போவதாக அறிவித்துள்ளது.. கர்நாடகா மாநிலத்தில் உள்ள எல்பிஜி உபகரணங்கள் ஆய்வு மையத்தில், இதற்கான அங்கீகாரம் கிடைத்ததுமே, உடனடியாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
சர்ப்ரைஸ்: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு சர்ப்ரைஸையும், இந்தியன் ஆயில் நிறுவனம் தந்துள்ளது.. அதாவது, 5 வருடத்துக்கு ஒரு முறை கேஸ் சிலிண்டர் ரப்பர் குழாயை மாற்ற வேண்டும்.. ஆனால், பலபேர், அந்த ரப்பர் குழாயை மாற்றுவதே கைடயாது.. இப்படி, மாற்ற வேண்டிய கஸ்டமர்களின் விபரம், கேஸ் ஏஜன்சிகளிடம் உள்ளது.
அதனால், அவர்களை தொடர்பு கொண்டு, ரப்பர் குழாய் மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, இதற்கு சிறப்பு சலுகையாக, ரப்பர் குழாய் விலையானது, 190 ரூபாயிலிருந்து, 155 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறதாம். அதனால், உரியவர்கள் உடனடியாக, இந்த சலுகையை பயன்படுத்தி, ரப்பர் குழாயை மாற்றி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
ஈரான் - அமெரிக்கா போரால் நெருக்கடி.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்! ஆலோசித்தது என்ன? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications