கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் வணிகர்கள்!
சென்னை : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1937க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 8 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.8 விலை அதிகரித்து ரூ.1,945 ஆக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் வணிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.86 குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.1,180.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து 406-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications