போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!
சென்னை: கியாஸ் சிலிண்டர் விலை 137 நாட்களுக்கு பிறகு இன்று ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 15 மாதத்தில் மட்டும் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.257 அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெயின் சந்தை விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் கியாஸ் சிலிண்டர் விலையும் அவ்வப்போது மாற்றப்படும்.

நான்கரை மாதம் மாற்றவில்லை
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை போன்று நான்கரை மாதமாக கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநில தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலையொட்டி தான் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலைகள் மாற்றம் செய்யப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.917 ஆக இருந்தது.

ரூ.50 உயர்வு
இந்நிலையில் 5 மாநில தேர்தல்கள் முடிவுகள் மார்ச் 10ல் அறிவிக்கப்பட்டன. இதில் மத்தியில் ஆளும் பாஜக கட்சி பஞ்சாப் தவிர பிற 4 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 137 நாட்களுக்கு பின் 14.20 கிலோ எடை கொண்டு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.967 ஆக எகிறியுள்ளது.

15 மாதங்களில் ரூ.257 உயர்வு
இதற்கிடையே 2021 ஜனவரி முதல் கடந்த 15 மாதங்களில் மட்டும் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.257 வரை உயர்ந்துள்ளது. அதன்படி 2021 ஜனவரி 1ல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. இது ரூ.100 அதிகமானதால் பிப்ரவரி 25ல் ரூ.810ஆக மாறியது. அதன்பின் மார்ச் 1ல் ரூ.835 ஆக கூட்டப்பட்டது. ஏப்ரல் 1ல் ரூ.10 குறைந்தது. இதனால் சிலிண்டர் விலை ரூ.825 ஆக இருந்தது.

137 நாளுக்கு பின்
அதன்பின் ரூ.25 உயர்த்தப்பட்டதால் ஜூலை 1ல் ரூ.850க்கு சிலிண்டர் விற்பனையானது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 17ல் ரூ.875 ஆக நிர்ணயிக்கப்பட்ட விலை செப்டம்பர் 1ல் ரூ.900 எனவும், அக்டோபர் 6ல் 917 எனவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 137 நாளுக்கு பின் இன்று மார்ச் 22ல் ரூ.967 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கான பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

பெட்ரோல், டீசல் உயர்வு
இதேபோல் நான்கரை மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications