Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் சிலிண்டர் விலை.. தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்ளோ பாருங்க..கதறவிடும் நவம்பர் மாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த நவம்பர் மாதத்தில், சமையல் சிலிண்டரின் விலையானது, பொதுமக்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது என்றாலும், மத்திய அரசு, கேஸ் சிலிண்டர் விலையை விரைவில் குறைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையிலே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

Gas Cylinder Rate in this November Month and and PMUY Gas Cylinder subsidy scheme increased soon, say sources

நடைமுறை: இதில், பெட்ரோல், டீசல் விலையை மட்டும் தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், கேஸ் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது, ரூ. 1,898-க்கு விற்பனை செய்யப்பட்து.. அதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.. எனவே, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள்: அதனால், எப்படியும் இந்த நவம்பர் மாதத்திலாவது, கேஸ் விலை குறையும் என்றே கணிக்கப்பட்டது. அதற்கேற்றார்போல், நவம்பர் 1-ம் தேதி, எண்ணெய் நிறுவனங்கள் விலை நிலவரத்தை வெளியிட்டிருந்தன..

அதில், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையானது, ரூ. 101.50 உயர்ந்த நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.. இதனால், வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50-க்கு விற்பனையானது.

இஸ்ரேல் விவகாரம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் காரணமும் கூறப்பட்டது.

ஏற்ற இறக்கங்கள்: சிலிண்டர் விலை ஏற்ற இறக்கங்கள் அனைத்துமே தங்களை நேரடியாக பாதிக்கும் நிலைமை உள்ளதால், பொதுமக்கள் சிலிண்டர் விலை குறித்த அறிக்கைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்த நவம்பர் மாத நிலவரப்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் எரிவாயு ரூபாய் 918.50-க்கும், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூபாய் 1999 .50 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

இந்நிலையில், விரைவில் சமையல் சிலிண்டருக்கான மானியம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.. மத்திய அமைச்சரவையில் உஜ்வாலா திட்ட சிலிண்டருக்கான மாநியத்தை ரூ.200ல் இருந்து ரூ.300 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.. இதனால், 14.2 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.803 ஆக குறைந்தது..

5 மாநில தேர்தல்: ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால்தான், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கருத்துக்களை கூறியிருந்தன. எனினும், மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பானது, பொதுமக்கள் தரப்பில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், அடுத்த சில மாதங்களில், பொதுத்தேர்தல் நடக்கப்போவதால், கேஸ் சிலிண்டருக்கான மானியம், மறுபடியும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.. கேஸ் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டுவரும்நிலையில், மத்திய அரசு வெளியிடப்போகும் மானியம் குறித்த அறிவிப்பானது, பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை இப்போதே உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+