வீடியோ ஏன் இன்னமும் வச்சிருக்கீங்க? படுக்கை அறையில் கேமரா வைப்பது கேவலம்.. அண்ணாமலையை விளாசிய காயத்ரி
சென்னை: கடந்த 2 மாதங்களில் 3 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். படுக்கை அறையில் கேமரா வைப்பது கேவலம் என காயத்ரி ரகுராம் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில் எல்லோரும் அவரவர் நியாயத்தை பேசுவதற்கு கட்சி வாய்ப்பு கொடுக்கும் போது என்னை மட்டும் ஏன் கார்னர் செய்கிறார்கள் என தெரியவில்லை. என் மீதான வெறுப்பு இப்போதுதான் வந்ததா இல்லை முன்பிருந்தே இருக்கிறதா என தெரியவில்லை.
இதற்கு முன்பு அண்ணாமலை ஒரு வன்மமான விஷயத்தை சொல்லியிருந்தார். அதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எல்லாம் கேட்டிருப்பீர்கள். மதன் ரவிசந்திரனுடனான ஆடியோவில் அவர் என்ன பேசியிருந்தார். காயத்ரியும் குஷ்புவும் என் அறைக்கு வந்தால் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகவே நான் கண்ணாடி கதவை வைத்தேன் என கூறியிருக்கிறார்.

சீரியஸாக வேலை பார்த்தேன்
பாஜகவுக்காக நான் சீரியஸாக வேலை பார்த்திருக்கிறேன். மியான்மியரில் சிக்கித் தவித்த 44 தமிழர்களை நான் தாயகம் கொண்டு வந்திருக்கிறேன். என்னிடம் எந்த ஆடியோவும் வீடியோவும் இல்லை. அண்ணாமலைதானே சொல்லியிருக்கார், அவரிடம் வீடியோ இருப்பதாகவும் அதை காட்டினால் தப்பாகிவிடும், அசிங்கமாகிவிடும் என்று!

அலிஷா அப்துல்லா வீடியோ
அலிஷா அப்துல்லா குறித்தும் வீடியோ வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அப்படி வீடியோ வைத்திருந்தால் அதை போலீஸிடம் கொடுத்துவிட்டு அழித்துவிடலாமே. அதை ஏன் இன்னமும் வைத்திருக்க வேண்டும். பெட்ரூமில் கேமரா வைப்பது எத்தனை கேவலமான விஷயம். இது ஒரு தேசிய கட்சி, 150 பேர் இருக்கும் போது ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசியுள்ளார்.

துபாய் ஹோட்டல்
அதாவது துபாய் ஹோட்டல்ல காயத்ரி என்னவோ செய்திருக்காங்க, திமுக பிரமுகருடன் இருந்திருக்காங்க. என்னுடன் இரு பாஜக நிர்வாகிகளையும் அழைத்துக் கொண்டுதான் போனேன். அப்படியிருக்கும் போது இப்படி பேசலாமா, என் கேரக்டரையே சந்தேகிக்கும் அளவுக்கு பேசியுள்ளார்கள். இந்த விஷயத்தை நானும் அண்ணாமலையும் மட்டும் பேசியிருக்க வேண்டிய விஷயம். ஆனால் இவரோ 150 பேர் முன்னாடி பேசியுள்ளார்.

வார் ரூம்
வார் ரூமுக்கு போய், புலனாய்வு பத்திரிகை வரை சென்று இஷ்டத்திற்கு என்னை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். வீட்டில் நானும் என் அம்மாவும் தனியாக இருக்கிறோம். எனக்கு துபாயிலிருந்து ஒருவர் மெசேஜ் அனுப்பி மிரட்டுகிறார். டைகர் ரவி என்பவர் ஒரு ஜோக்கர் , பாஜக தலைவர்கள் 3 பேர் போயிருக்கிறார்கள். அவர்களிடம் என்ன நடந்தது என கேட்காமல் யாரோ சொன்னார்கள் என்பதற்காக என்னை டிரோல் செய்கிறார்கள்.

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
அண்ணாமலையால் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நான் கூறியிருந்தேன். இது போன்ற வீடியோக்கள், ஆடியோக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத்தான் வெளியே வருகின்றன. 2 மாதங்களில் மட்டும் இந்த வீடியோ விவகாரத்தால் 3 பெண்கள் பாதிக்கப்பட்டுவிட்டோம். 2 மாதமாக கட்சியிலிருந்தவர்களுக்கு ஒரு நியாயம் 2 வருஷமாக இருந்தவர்களுக்கு ஒரு நியாயம், 8 ஆண்டுகளாக கட்சியில் உழைத்து எனக்கு ஒரு நியாயம் என்பது எத்தனை தவறான விஷயம்.

நீதி கிடைக்கவில்லை
எனக்கு ஏன் நியாயம் கிடைக்கவில்லை. நீதி மறுக்கப்படுகிறது? நான் விசாரணைக்கு இப்ப கூட ரெடியாக இருக்கிறேன். ஆனால் எனது விளக்கத்தை கேட்கத்தான் இவர்கள் ரெடியாக இல்லை. இவரை நம்பி போகிறேன். அப்படியிருக்கும் போது கட்சித் தலைவரே 150 பேர் முன்னாடி என்னை பற்றி தவறாக பேசினால் எப்படி, இதுதான் என் கேள்வி, அப்போ பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றுதானே அர்த்தம். இவ்வாறு காயத்ரி ரகுராம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications