பிடிஆர் இதை மட்டும் பண்ணுங்க.. எல்லாம் சரியாகிடும்.. காயத்ரி ரகுராம் கொடுத்த அட்வைஸ்.. காரசாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்டரில் கோபமாக பல ட்வீட்களை செய்து வரும் நிலையில் பாஜக உறுப்பினர் காயத்ரி ரகுராம் பிடிஆரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக சில வதந்திகள் இணையத்தில் பரவ, அதற்கு பிடிஆர் கோபமாக பதில் அளிக்க, அதற்கு பாஜகவினர் பதிலடி கொடுக்க என்று அடுத்தடுத்து பல ட்வீட்கள் செய்யப்பட்டு கடும் மோதல் இணையத்தில் ஏற்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்ற காரணத்தை பிடிஆர் விவரமாக வெளியிட்டுவிட்டார். ஆனாலும் இது தொடர்பாக தெரிவிக்கப்படும் அவதூறுகளுக்கு தற்போது அவர் கடுமையாக பதில் அளித்து வருகிறார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

பிடிஆரின் தொடர் ட்வீட்களை தொடர்ந்து அவருக்கு பாஜக, அதிமுக தரப்பில் இருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் நிதி அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு நிலையான அறிவும், மனநிலையும் இருக்க வேண்டும். மாறாக தமிழ்நாடு பொருளாதாரத்தையும், அமைச்சரவையும் பாதிக்க செய்யும் வகையில் செயல்படும் நபருக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது. இந்த ட்வீட் அவர் தனது ட்வீட்களை டெலிட் செய்ததற்கான சாம்பிள், என்று பிடிஆரை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இதையடுத்து பிடிஆர் தற்போது ட்வீட்டரில் பலரை பிளாக் செய்து வருகிறார். பொய்யான செய்திகளை பரப்பும் நபர்கள், வதந்திகளை பரப்பும் நபர்களை பிடிஆர் பிளாக் செய்ய தொடங்கி உள்ளார். இந்த நிலையில்தான் பாஜக உறுப்பினர் காயத்ரி ரகுராம் செய்துள்ள ட்வீட்டில், உங்களால் தமிழ்நாட்டில் இருக்கும் 8 கோடி பேரையும் பிளாக் செய்ய முடியாது. அதனால் பிடிஆர் நீங்கள் ஒரே ஒரு விஷயம் செய்யுங்கள்.. உங்களை நீங்களே ட்வீட்டரில் பிளாக் செய்து கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் நல்லது, என்று விமர்சனம் செய்து இருக்கிறார்.

பிளாக்

பிளாக்

பிடிஆர் ட்வீட்டரில் தொடர்ந்து பாஜகவினரின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தார். இது தொடர்பாக வதந்தி பரப்பியவர்களை டேக் செய்து கடுமையாக பதில் அளித்து இருந்தார். சில இடங்களில் பிடிஆர் கொஞ்சம் எல்லை மீறி கோபப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. திமுக தரப்பில் இருந்தும் கூட இதற்கு விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில்தான் பிடிஆரின் ட்வீட்களுக்கு தற்போது காயத்ரி விமர்சனம் வைத்துள்ளார்.

Recommended Video

    PTR சுளீர்! | மாட்டு மூத்திரம் குடித்து மூளை கெட்டு விட்டதா? | Oneindia Tamil
    ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    இவரின் ட்வீட்களுக்கு அதிமுக தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்து இருக்கிறது. அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரும் பிடிஆரை விமர்சனம் செய்து இருந்தார். தமிழ்நாடு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அதற்கு அவர் சொல்லுகிற காரணமும் ஏற்க கூடியதாக இல்லை. நான் மக்கள், மற்றும் வணிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் இருந்தது கிடையாது. நிதி அமைச்சர் தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகம்.. தம்பி பிடிஆர் கவனத்தில் கொள் என்று கடுமையாக ஜெயக்குமார் விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+