“உடைமாற்றும் அறையில் கேமராவுடன் நுழைந்த மோடி..இந்திய வீரர்கள் கவலையிலும் விளம்பரம்!” காயத்ரி காட்டம்
சென்னை: இந்திய அணி வீரர்களின் உடை மாற்றும் அறைக்குள் பிரதமர் மோடி ஆக்சன் கேமராவுடன் சென்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பதாக பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளார்.
கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஞாயிறு அன்று இறுதிப்போட்டியுடன் முடிந்தது. தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

2 வதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் டிராவிஸ் ஹெட்டும் லபுஷேனும் சேர்ந்து அபாரமாக ஆடி 43வது ஓவரில் இலக்கை கடந்து வெற்றிபெற்றனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருந்த வீரர்கள், ரசிகர்கள் வேதனையில் கண்ணீர் வடித்தனர். விராட் கோலி, கேப்டன் ரோகித் ஷர்மா, முஹம்மது சிராஜ், குல்தீப் யாதவ், முஹம்மது ஷமி, சுப்மன் கில் என அனைத்து இந்திய வீரர்களும் கண்ணீர் வடித்து சோகத்துடனே மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இந்திய அணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்குள் சென்று உடைந்து அழுததை பார்க்கையில் வேதனையாக இருந்ததாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமியின் தலையை பிடித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவிக்கும் புகைப்படம் வெளியானது. இதனை பகிர்ந்து பிரதமர் மோடிக்கு ஷமி நன்றி கூறி இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் உடை மாற்றும் அறைக்குள் பிரதமர் மோடி சென்று அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் கூறும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் கருத்து கூறி இருக்கிறார். அவர் பேசுகையில், "டிரஸ்ஸிங் ரூமில் கிரிக்கெட் வீரர்கள் கலக்கமடைந்த போது, மோடிஜி மைக் கேமரா ஆக்ஷன் மூலம் விளம்பரம் செய்து கொண்டிருந்தார், வீரர்கள் சங்கடமானார்கள். 1983 சாம்பியன்கள் பிசிசிஐயால் அவமரியாதை செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் நீங்களும் அதேபோல் மதிக்கப்படுவீர்கள்.
எல்லாம் நமது பிரதமர் மற்றும் பிசிசிஐ ஹீரோ ஜெய் ஷா அவர்களை பற்றியது. இது 140 கோடி மக்கள் மற்றும் உங்கள் உணர்வுகளை பற்றியது அல்ல. எல்லாம் விளம்பரம் பற்றியது. இந்திய அணி இழப்பு, குஜராத் வணிக லாபம் (விமானங்கள், ஹோட்டல்கள், உணவு, லஞ்சம், மது). இது ஊழல் இல்லையா? நீங்கள் அனைவரும் அரசியல் ரீதியாக பிடிபட்டீர்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications