அண்ணாமலையை கைது பண்ணுங்க.. ஆருத்ரா மோசடியில் கைதானவர் அமர் பிரசாத்தின் “ரைட் ஹேண்ட்” -விடாத காய்த்ரி
சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் அதன் நிறுவனரும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான ஹரீஷ் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதாமாதம் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக கூறி விளம்பரம் செய்தது.
இதன் நிறுவனர் ஹரீஷ் தமிழ்நாடு பாஜக விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர். இதன் மூலம் ரூ.2,438 கோடி பணம் வசூலித்ததாக கூறப்பட்டது.

போலீசார் சோதனை
ஆனால், மக்களிடம் வாங்கிய பணத்தை சொன்ன நேரத்தில் திருப்பி வழங்கவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் 14 பேர், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கைது நடவடிக்கை
இந்த வழக்கில் 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த ஹரீஷை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஹரீஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரோடு மாலதி என்ற ஆருத்ரா நிறுவன நிர்வாகியும் கைதாகி இருக்கிறார்.

ஹரீஷ் கைது
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், "பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா கோல்ட் மோசடியில் பாஜக அமர் பிரசாத் ரெட்டியின் வலது கரம் பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் ஹரீஷ் கைது. அண்ணாமலை முன்னாள் காவலராக இருந்து தமிழக மக்களை ஏமாற்றிய திருடனுக்கு உதவி செய்துள்ளார்.

நேற்றும் ட்வீட்
குறிப்பாக பெண்களின் பணம் மற்றும் தங்கம். பதவி கொடுத்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்தவரையும் கைது செய்ய வேண்டும். அண்ணாமலையின் சாதனை போலிமலை." என்று குறிப்பிட்டு உள்ளார். நேற்றும் அவர் ஆருத்ரா விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், "ஏப்ரல் 14 அன்று நீங்கள் ஏன் ஊழலுக்கு எதிராக நடக்கவில்லை. அதற்கு பதிலாக நீங்கள் டெல்லி செல்கிறீர்கள்.

ஆருத்ரா மோசடி
போலி வாக்குறுதி எம்பி சீட்களுக்காக, ஏன் எந்த ஊடகமும் ஆருத்ரா, IFS மற்றும் பிற நிறுவனங்களைப் பற்றி கேள்வி கேட்கவில்லை & எத்தனை பேர் உங்களிடம் பணத்தை திரும்பப் பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். உருட்டு மன்னன். உங்கள் ஊழல் பற்றி கேட்டால் ஏன் கண்களை தோண்டி எடுக்கிற? திமுக ஊழலைக் கூட தேடுவதற்கு ED மற்றும் வருமான வரித்துறை உள்ளது, உங்கள் எக்ஸெல் ஷீட் புகார் தேவையில்லை." என்று தெரிவித்து இருந்தார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications