"பிரதமர் மோடிதான் எனது ஒரே தலைவர்!" கட்சி பதவி பறிபோன பின் காயத்ரி ரகுராம் ட்வீட்! யாரை சீண்டுகிறார்
சென்னை: கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக அவரது ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மாதங்களிலேயே, அப்போது பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார்.
இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகிய நிலையில், அண்ணாமலைக்கு அப்பதவி கொடுக்கப்பட்டது.

தமிழக பாஜக
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட உடனேயே தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படும் என்று தொடர்ச்சியாகத் தகவல் வெளியாகிக் கொண்டே இருந்து. புதிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது அது வெளியிடப்பட்டுள்ளது. மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டிற்கு அண்ணாமலை சமீபத்தில் சென்று இருந்தார்.

புதிய நிர்வாகிகள்
அவர் தமிழ்நாடு திரும்பிய உடன் இந்த புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலப் பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 5 பேர் தமிழக பாஜக பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்,

காயத்ரி ரகுராம்
தற்போது வெளியாகி உள்ள இந்த பாஜக நிர்வாகிகள் பட்டியலில் காயத்ரி ரகுராமின் பெயர் இல்லை. கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பெப்சி சிவக்குமார் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தன்னை பதவியில் இருந்து நீக்க மாட்டார்கள் என காயத்ரி ரகுராம் பெரிதும் நம்பி இருந்த நிலையில், அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அண்ணாமலை.

ஒரே தலைவர்
காயத்திரி ரகுராமின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக இணையத்தில் பலரும் பல விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே காயத்திரிரகுராமே இரு ட்வீட்களை பதிவிட்டுள்ளார். முதல் ட்வீட்டில் புதிய பாஜக நிர்வாகிகளை வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில், "எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி" என்று பதிவிட்டுள்ளார்.

யாரை சீண்டுகிறார்
பதவியில் இருந்து தன்னை கயத்திரி ரகுராம் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை சீண்டும் வகையில் அவர் ட்வீட் செய்துள்ளது தான் இணையத்தில் இப்போது டிரெண்டங்கில் உள்ளது. தமிழகத்தில் வளர பாஜக காலம் பார்த்து கொண்டு இருக்கும் சூழலில், இந்த புதிய நிர்வாகிகள் நியமனம் கட்சிக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு












Click it and Unblock the Notifications