Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தப்பு செஞ்சுட்டாங்களே".. திமுகவை மீண்டும் சீண்டிய பாஜகவின் காயத்ரி ரகுராம்.. பரபரப்பு ட்வீட்..!

காயத்ரி ரகுராம் மீண்டும் திமுகவை விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயிரிழந்த பாமக நிர்வாகி கோவிந்தராசுக்கு நீதி வேண்டும் என்று கேட்டு, திமுக அரசை சரமாரி விமர்சித்து, பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் திமுகவை சேர்ந்த எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பணியாற்றி வந்த தொழிலாளி கோவிந்தராசு.. இவர் பாமக நிர்வாகி ஆவார்.. திடீரென கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 மர்ம மரணம்

மர்ம மரணம்

கோவிந்தராசுவை கொலை செய்துவிட்டார்கள், இதற்கு எம்பி ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று சொல்லி, அவரது மகன் செந்தில்வேல் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்... அதில், விஷம் குடித்து இறந்து விட்டதாக சொல்லப்படும் நிலையில் தன்னுடைய அப்பாவின் உடம்பில் ரத்தக் காயங்களும், அடித்து துன்புறுத்தியதற்கான அடையாளங்களும் இருந்தன என்று கூறியிருந்தார்.

 பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

மேலும் தன்னுடைய அப்பாவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டு, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்றும் அவரது மகன் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹைகோர்ட் உத்தரவின் கோவிந்தராஜ் உடலை கடந்த செப்டம்பர் 23ம் தேதி பிரேத பரிசோதனை செய்து முடித்தனர்.

சிபிசிஐடி

சிபிசிஐடி

கோவிந்தராசு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.. இதற்கான விசாரணையும் கடந்த செப்டம்பர் மாதம் 28 ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போதுதான், கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது... இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் ஊழியர்கள் 5 பேரை இன்று அதிகாலை போலீசார் இந்த கொலை வழக்கில் கைது செய்தனர்..

 காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

எம்பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. .. ஆனால் அவர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.. இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தைதான் பாஜகவின் காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.. அதில் உயிரிழந்த கோவிந்தராசுவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

ட்வீட்

ட்வீட்டில், "திமுகவால் வாக்குறுதியளிக்கப்பட்ட எந்த ஒரு அறிக்கையையும் மக்கள் பெறமாட்டார்கள் ஆனால் தமிழ் மக்கள் திமுகவிடம் இருந்து அச்சுறுத்தல்கள், கொலைகள், கொள்ளை மற்றும் திருட்டை மட்டுமே பெறுகின்றனர்.. திமுகவுக்கு வாக்களித்ததில் மக்கள் பெரும் தவறு செய்துவிட்டனர்.. #JusticeForGovindaraj" என்று பதிவிட்டுள்ளார்.

 ஆட்சி பொறுப்பு

ஆட்சி பொறுப்பு

முன்பெல்லாம் விசிகவை சரமாரி விமர்சித்து வந்த காயத்ரி, இந்த முறை திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஆளும் கட்சியை விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்.. அந்த வகையில் நீட் விவகாரம், பிடிஆர் ஜிஎஸ்டி கூட்ட விவகாரம் உட்பட அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து கேள்வி எழுப்பியும் வருகிறார். கோவிந்தராசு மரண வழக்கிலும் திமுகவையே விமர்சித்துள்ளார்.

 நீதி தேவை

நீதி தேவை

கோவிந்தராசு பாமக நிர்வாகி என்றாலும், திமுக அரசில் வன்முறை பெருகி உள்ளது என்பதை சுட்டி காட்டுவதற்காகவே இந்த ட்வீட்டினை பதிவிட்டுள்ளார் காயத்ரி... இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. கோவிந்தராசு மரணத்துக்கு நீதி வேண்டும் என்று பலர் ஆதரவாக பதிவிட்டாலும், மேலும் பலர் "உபியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்றார்களே, அதை பற்றியும் பேசலாமே" என்று காயத்ரியிடம் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+