“உருட்டு மன்னன்.. போலிமலை ரசிகர் மன்றம்! அண்ணாமலை மீது டெல்லி ஆக்ஷன் எடுக்கலாம்” -காயத்ரி ரகுராம்
சென்னை: 4 மாநிலங்களின் பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டதைபோன்ற நிலை தமிழ்நாடு பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி நடவடிக்கை எடுக்கலாம் என கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் சாடி இருக்கிறார்.
டெய்சி - சூர்யா சிவா ஆடியோ விவகாரம் தொடர்பாக விமர்சனம் செய்ததால் நடிகை காய்த்ரி ரகுராமை கடந்த நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
அதை தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழ்நாடு பாஜக நிர்வாகம் மீதும் அண்ணாமலை மீதும் தினசரி பல்வேறு விமர்சனங்களை காயத்ரி ரகுராம் முன்வைத்து வருகிறார்.

அண்ணாமலை மீது புகார்
மூத்த நிர்வாகிகளை ஹனி டிராப் செய்வதாகவும் வார் ரூம் மூலமாக அண்ணாமலை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டிய காயத்ரி ரகுராம், கட்சிக்கு உழைக்காமல் தன்னை விளம்பரம் செய்துகொள்வதாகவும் குற்றம்சாட்டி வந்தார். 150 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் அண்ணாமலை தன்னை அவமானப்படுத்தியதாக சாடிய காய்த்ரி ரகுராம் தமிழ்நாடு பாஜகவில் இருந்தே தான் விலகுவதாக அறிவித்தார்.

வாட்ச் பில் கட்டுங்கள்
இந்த நிலையில் இன்று அண்ணாமலை அளித்த பேட்டியை பகிர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் காயத்ரி ரகுராம், "ஊழலற்ற வாட்ச் பில் காட்டுங்கள். உங்கள் ஊழலற்ற அறக்கட்டளை நிதி நன்கொடைகளைக் காட்டுங்கள். ஏப்ரல் 14 அன்று நீங்கள் ஏன் ஊழலுக்கு எதிராக நடக்கவில்லை. அதற்கு பதிலாக நீங்கள் டெல்லி செல்கிறீர்கள்.

ஆருத்ரா மோசடி
போலி வாக்குறுதி எம்பி சீட்களுக்காக, ஏன் எந்த ஊடகமும் ஆருத்ரா, IFS மற்றும் பிற நிறுவனங்களைப் பற்றி கேள்வி கேட்கவில்லை & எத்தனை பேர் உங்களிடம் பணத்தை திரும்பப் பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். உருட்டு மன்னன். உங்கள் ஊழல் பற்றி கேட்டால் ஏன் கண்களை தோண்டி எடுக்கிற?

டெல்லி மட்டுமே அதிகாரம்
திமுக ஊழலைக் கூட தேடுவதற்கு ED மற்றும் வருமான வரித்துறை உள்ளது, உங்கள் எக்ஸெல் ஷீட் புகார் தேவையில்லை. அவர் சாராய அமைச்சர் என்றால் நீங்கள் சாராய போதை அடிமை தலைவர். பிறரை அழைக்கும் புனைப்பெயர் உங்களை பிரபலமாக்காது. அருவருப்பான செயல். பாஜகவின் 4 மாநில தலைவர்கள் மாற்றப்பட்டனர். டெல்லிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதை இது காட்டுகிறது.

போலிமலை ரசிகர் மன்றம்
டெல்லி மற்றும் தமிழ்நாடு மூத்த தலைவர்களை மதிக்காத அண்ணாமலைக்கும் இதே போல் அளிக்க தயங்க மாட்டார்கள். அனைத்து போலிமலை ₹200 ரசிகர் மன்றங்களுக்கும் எச்சரிக்கை. என்ன உங்கள் குழுவில் இருநூறு பேர் மட்டுமே இருப்பார்கள். டெல்லி அவர்களின் பாணியில் தேவையற்ற களைகளை எப்படி எடுக்கும் என்று பார்க்க வேண்டுமா? வார்ரூம் முட்டாள்கள்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications