திருமாவளவன் குறித்து தொடர் சர்ச்சை பதிவுகள்... காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் முடக்கம்!
Recommended Video
சென்னை: தொடர்ச்சியாக திருமாவளவன் மற்றும் விசிக குறித்து சர்ச்சை பதிவுகளை நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டு வந்த நிலையில், விதிகளை மீறியதாக அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அசிங்கமான பொம்மைகள்
"பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். "அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்" என்று தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையானது.

இந்து அமைப்புகள்
இதனால் கோபம் அடைந்த இந்து அமைப்பினர் திருமாவளவனை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனிடையே தனது பேச்சுக்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்தார். உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்கள் அவை என்று அவர் அறிக்கையில் கூறினார்.

கடும் கோபம்
இந்நிலையில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை வெளியிட்டார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

காயத்ரி வீடு முற்றுகை
அத்துடன் திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க... நடிப்பு பத்தல எனவும் கமெண்ட் செய்திருந்தார். இதனால் கோபம் அடைந்த விசிகவினர் அவரது வீடடை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள் அதையும் அவர் டுவிட் செய்திருந்தார்.

காயத்ரி கோரிக்கை
இதற்கிடையே விசிகவினரிடம் தனக்கு வந்த அழைப்புகள் குறித்து நேரலை செய்து இருந்தார். அதேசமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்திருந்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டது
இந்த நிலையில் தொடர்ச்சியாக திருமாவளவன் மற்றும் விசிக குறித்து சர்ச்சை பதிவுகளை காயத்ரி ரகுராம் வெளியிட்டு வந்த நிலையில், விதிகளை மீறியதாக அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications