உங்களை பார்த்தாலே தெறித்து ஓடும் முன்னணி நடிகைகள்.. விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால் மீது பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பாலியல் புகாரை முன் வைத்துள்ளார்.

Recommended Video

    என்ன சொன்னார்? Vishal மீது பாலியல் புகார் கூறிய Gayathri Raguram | Oneindia Tamil

    பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரை எதிர்த்து திரை பிரபலங்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

    பாலியல் தொல்லை

    பாலியல் தொல்லை

    அதில் அவர் பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    பாஜக நிர்வாகி

    பாஜக நிர்வாகி

    இந்த நிலையில் நடிகர் விஷால் மீது பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சினிமா துறையில் இருக்கும் விஷால் அவர்களே முதலில் அந்த துறையில் உள்ள பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களை கண்டியுங்கள். புதிதாக சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். முன்னணி நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கவனியுங்கள்.

    எத்தனை பெண்கள்

    எத்தனை பெண்கள்

    நீங்களும் உங்கள் நண்பர்களும் இது போல் எத்தனை பெண்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்திருப்பீர்கள். உங்களை போன்றோர்களால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சினிமா துறையில் பாலியல் புகார்களை கூறும் பெண்கள் உங்கள் உதவியை நாடும் போது உங்கள் ஹீரோயிசத்தை அங்கே காட்டுங்கள்.

    தொடர் அணுகுமுறை

    தொடர் அணுகுமுறை

    உண்மையை சொல்ல போனால், உங்களுடைய "தொடர் அணுகுமுறை"யால் உங்களிடம் இருந்து முன்னணி நடிகைகள் ஓட்டம் பிடிக்கிறார்கள். அதை தெரிந்து கொள்ளுங்கள் என மிகவும் காட்டமாக ட்வீட் போட்டுள்ளார் காயத்ரி ரகுராம். இவரது இந்த ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+