"முதல்வர்" அண்ணாமலை.. காயத்ரி ரகுராம் என்ன இப்படி டக்குனு சொல்லிட்டாரே.. அதகளமாகும் ட்விட்டர்

காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, காயத்ரி ரகுராம் பதிவிட்ட பிறந்த நாள் வாழ்த்து, ஒட்டுமொத்த பாஜகவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பு வகித்து விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை.. தமிழக பாஜகவுக்கு எல்.முருகனுக்கு பிறகு தலைவராக நியமிக்கப்பட்டவர்.

தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.. கட்சியில் சேர்ந்த அண்ணாமலைக்கு உடனே மிகப்பெரிய போஸ்டிங் தரப்பட்டது, பாஜகவின் பல சீனியர் தலைவர்களுக்கு காதில் புகையை வரவழைத்துவிட்டது.

 4 எம்எல்ஏக்கள்

4 எம்எல்ஏக்கள்

ஆனால், அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான், தமிழகத்தில் 4 பாஜக வேட்பாளர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர் என்பதை மறுக்க முடியாது.. இதன் டெல்லியின் கவனத்தையும், டெல்லி தலைவர்களின் அபிமானத்தையும் நேரடியாக பெற்றுள்ளார் அண்ணாமலை.. இப்போது திமுக பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி, அதிமுகவையும் சேர்த்து அலற விட்டுக் கொண்டிருக்கிறார்.

 பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

இந்நிலையில், இன்று அண்ணாமலைக்கு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவின் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பல தலைவர்களும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.. ஆனால், காயத்திரி ரகுராம் சொல்லி உள்ள பிறந்த நாள் வாழ்த்துதான், அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

 பிரதமர் - முதல்வர்

பிரதமர் - முதல்வர்

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,"இந்தியாவின் வருங்கால பிரதமர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது எம்.பி., அல்லது முதல்வர் அல்லது எம்.எல்.ஏ. அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நம்பிக்கையின்மையில் இருந்து நம்பிக்கை வரை, பார்ப்பனிய மனநிலையில் இருந்து தேசம்தான் முதல் வரை, ஒருதலை பட்சம் முதல் முழுமையான வளர்ச்சி வரை, இருளில் இருந்து ஒளி வரை, விஸ்வகுரூ" என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

சமீபத்தில்தான் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி நீக்கப்பட்டார்.. புதிய பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டபோதுகூட, அந்த புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனத்தில்கூட காயத்ரியின் பெயர் இடம் பெறவில்லை.. தன்னிச்சையாக காயத்ரி செயல்பட்டது, சர்ச்சைகளை கிளப்பியது போன்ற காரணங்களுக்காக பதவி பறிக்கப்பட்டதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியான.. தன்னை எல்லாம் பொறுப்பில் இருந்து நீக்க மாட்டார்கள் என்று கடைசிவரை நம்பிக் கொண்டிருந்த காயத்ரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

 வார்டு மெம்பர்

வார்டு மெம்பர்

இருந்தாலும், மாநில தலைவர் அண்ணாமலை, "முதல்வராக, பிரதமராக" வர வேண்டும் என்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது, அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "வேற ஸ்டேட்டுக்கு வேண்டுமானால் முதல்வரா வரலாம் என்றும், பிரதமர் மோடிக்கு இந்த விஷயம் தெரியுமா என்றும், கேள்வி எழுப்பி வருகிறார்கள்..மேலும் சிலர், முதலில் வார்டு மெம்பர் ஆகட்டும் மேடம்" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+