"கடும் கண்டனம்.. எங்கே ஜனநாயகம்..?" கிஷோர் கே சாமி கைதுக்கு.. பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிஷோர் கே சாமி கைதுக்கு பாஜக கட்சியை சேர்ந்த நடிகர் காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    3 நாளில் அடுத்தடுத்து சிக்கிய Youtubers.. தட்டி தூக்கிய போலீஸ்

    பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வந்த யூ டியூபர் கிஷோர் கே சாமி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து திமுக தலைவர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், சில சினிமா துறையினர், பெண் பத்திரிகையாளர்கள் என்று பலரை தவறாக பேசி வந்தார்.

    இவருக்கு எதிராக பெண் பத்திரிகையாளர்கள் பலர், பல முறை புகார் அளித்துள்ளனர். இவர் மீது முன்பே புகார் அழிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    போலீஸ்

    போலீஸ்

    எந்த விதமான போலீஸ் நடவடிக்கைக்கும் இவர் அஞ்சாமல் தொடர்ந்து யூ டியூபில் வீடியோ போட்டு வந்தார். பல்வேறு தவறான கருத்துக்களை, அவதூறுகளை இவர் பரப்பியதாக புகார்கள் வைக்கப்பட்டன. அதேபோல் பேஸ்புக், டிவிட்டரில் இவர் மோசமாக பேசியதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

    கைது

    கைது

    அரசியல் தலைவர்களுக்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துகளையும் தொடர்ந்து இவர் வெளியிட்டு வந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று கிஷோர் கே சாமி மொத்தமாக கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சிறைச்சாலையில் இவர் அடைக்கப்பட்டார்.

    கண்டனம்

    கண்டனம்

    இந்த நிலையில் கிஷோர் கே சாமி கைதுக்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது கருத்து சுதந்திரம், இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, திமுக அரசு இவரை பழி வாங்குகிறது என்றெல்லாம் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். கிஷோர் கே சாமி கைதுக்கு பாஜக கட்சியை சேர்ந்த நடிகர் காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    " கிஷோர் கே.சாமியை திமுக தலைவர்களை விமர்சித்த காரணத்திற்காக கைது செய்துள்ளனர். இதற்கு என் கண்டனம். ஜனநாயகம் எங்கே? பிரதமர் குறித்து ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இருவரும் பொய்யாக பேசுகிறார்கள்,. இந்து தர்மம், பிராமணர்கள் பற்றி திருமாவளவன் தவறாக பேசும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று காயத்ரி ரகுராம் விமர்சனம் வைத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+