இந்துத்துவா + ஜெயலலிதா.. அதிமுகவுக்கு சவால் விட்ட அண்ணாமலை! பைத்தியம்.. ஒரே வரியில் முடிச்சுட்டாங்களே!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவவாதி என தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பிய பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அதிமுக மகளிர் அணி துணை செயலாளரான காயத்ரி ரகுராம் ஒரே வரியில் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலில் 6ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர் ஜெயலலிதா குறித்து பேசியது அக்கட்சியினரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக பேட்டியில் பேசியிருந்த அண்ணாமலை," தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது.
அண்ணாமலை: இதனால் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது என பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கு ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார்,ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாமலையின் கருத்து உண்மைதான் என கூறியிருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பியான திருநாவுக்கரசர், ஜெயலலிதா ஒரு ஆன்மீகவாதி தான். அவர் கடவுளை கும்பிடுவார் அதற்காக அவர் மதவெறி பிடித்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். தெய்வத்தின் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார்." என கூறினார்.

இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்த அண்ணாமலை,"தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களை ஒரு சிறந்த ஹிந்துத்துவவாதி என்று நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? கர சேவை குறித்து பேசிய ஜெயலலிதா அது தவறு இல்லை எனக் கூறியிருக்கிறார்.. இந்துத்வா என்பது மதம் சார்ந்தது அல்ல.. அது ஒரு வாழ்வியல் முறை.. ஜெயலலிதா இந்துத்துவாவாதி இல்லை எனக் கூறும் அதிமுகவினர் என்னுடன் விவாதம் நடத்த தயாரா?" எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு மீண்டும் அதிமுகவினரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து அறிக்கை, எக்ஸ்பதிவு என அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர். இந்நிலையில் அண்ணாமலையுடன் எல்கேஜி மாணவன் கூட விவாதம் நடத்த மாட்டான் என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," ஒரு எல்கேஜி மாணவன் கூட இந்த முட்டாள் மனிதனுடன் விவாதம் செய்ய மாட்டான். ஒரு முட்டாள் மற்றும் பைத்தியக்காரனுடன் விவாதிப்பது நேரத்தை வீணடிக்கிறது போல." ஒரே வரியில் பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிவை அதிமுகவினர் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் கமெண்ட் பிரிவில் பாஜகவினர் காயத்ரி ரகுராமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications