போலீஸ் கிடுக்கிப்பிடி கேள்வி.. மயங்கி விழுந்த ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா! மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல முயன்ற ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை எஸ்ஐடி போலீசார் இன்று விமான நிலையத்தில் மடக்கி பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் திடீரென்று மயங்கினார். இதையடுத்து அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

gem-granites-veeramanis-daughter-archana-veeramani-fainted-when-sit-interrogation

தமிழகத்தின் முன்னணி தொழிலதிபராக வலம் வந்த 82 வயது நிரம்பிய ஜெம் வீரமணி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 7 போக்சோ வழக்குகள், 2004ல் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கு என்று மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜெம் வீரமணி மட்டுமின்றி அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை ஜெம் வீரமணியின் உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இன்னும் கைது எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் இன்று ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை இன்று போலீசார் விமான நிலையத்தில் மடக்கி பிடித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட தயாரான நிலையில் அவரை எஸ்ஐடி போலீசார் பிடித்தனர்.

அதன்பிறகு அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிரமாக விசாரித்தனர். ஜெம் வீரமணியின் வழக்கை மூடி மறைக்க பெரிய அளவில் பணம், நகைகள் லஞ்சமாக கைமாறி உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அதுதொடர்பான விவரங்கள் அர்ச்சனா வீரமணிக்கு தெரியலாம் என போலீசார் நினைக்கின்றனர். இதனால் அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தும் நோக்கில் அவரை பிடித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் விசாரணையின்போது திடீரென்று அர்ச்சனா வீரமணி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+