ஜெம் வீரமணி வழக்கு.. தவெக அரசுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த சிபிஎம் சண்முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் தவறான தகவலை தெரிவித்து விட்டேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) செயலாளர் பெ சண்முகம் தன்னிடம் கூடியதாக அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருந்தார். ஆனால் குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ள பெ சண்முகம், வழக்கை முடித்து வைக்க தான் தவெக அரசு முயன்றது என மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜெம் வீரமணி வழக்கு குறித்து கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியதாவது:-

Gem Veeramani Case CPM P Shanmugam deals another blow to the TVK government

தவெக தானாக நடவடிக்கை எடுக்கவில்லை

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் திமுக, அதிமுக, தவெக அரசுகள் தாமாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக நடவடிக்கை எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தவெகவைச் சார்ந்தவர்கள் எதோ தானாகவே இந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

கடந்த ஜூன் 19 ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் இப்போது இருக்கும் தவெக அரசு சமர்ப்பித்த அறிக்கை என்பது இந்த வழக்கை முடித்துக்கொள்வது என்ற அடிப்படையில்தான் சமர்பிக்கப்பட்டது. ஆகவே, இந்த வழக்கு தங்களால்தான் தீவிரப்படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த பிரச்னை இவ்வளவு பேசப்படுவதற்கும், கைது நடவடிக்கைக்கும் காரணம் போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி தான்"என்று கூறியிருந்தார்.

நிர்மல் குமார் பேசியது

சண்முகத்தின் இந்த பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மல் குமார், "அண்ணன் சண்முகம் என்னிடம் நேற்று இரவு பேசினார். அப்போது, ஒரு பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தவறாக புரிந்துகொண்டேன். ஒரு பத்திரிகை செய்தியில் தவறான தேதியினை போட்டிருந்தார்கள். அதை பார்த்து அப்படி சொல்லிவிட்டேன். வரும் போது அதை தெளிவுப்படுத்துகிறேன் என்று சொன்னார். அவருக்கு யாரோ தவறாக தகவல் கொடுத்து விட்டார்கள்" என்று கூறினார்.

பெ சண்முகம் மறுப்பு

ஆனால், இன்று பத்திரிகையாளர் சந்திப்பிலும் தவெகவுக்கு பெ சண்முகம் மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியதாவது:- இந்த வழக்கை முடித்துக் கொள்கிறோம் என்ற அறிக்கையை தவெக அரசு மறுக்கவில்லை. நாங்கள் மேல் விசாரணை செய்கிறோம் என்கிற முறையில் அரசின் சார்பில் எந்தவிதமான அறிக்கையும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி தாக்கல் செய்யவில்லை. அன்றைய நிலையில் நீதிபதி பத்மா அவர்கள், மேல் விசாரணைக்கு உத்தரவிடுகிறேன். இந்த அறிக்கையை ஏற்கவில்லை. மேல் விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்று போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி அவர்கள் தான் உத்தரவிடுகிறார்கள்.

ஜூன் மாதம் 19 ஆம் தேதி அவர்களுடைய உத்தரவின் பேரில் தான் விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டு இப்போது வீரமணி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆகவே திமுகவும் சரி.. அதிமுகவும் சரி.. இப்போது உள்ள தவெகவும் சரி.. இதிலே அவர்கள் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+