போயஸ் கார்டன் பங்களா.. பார்ட்னர்களுக்கு சிறுமிகளை ‘விருந்து’ வைத்த ஜெம் வீரமணி.. விசாரணையில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வீரமணி தனது பார்ட்னர்களுக்கு மதுபானங்களுடன் சிறுமிகளை சீரழித்ததும், இதற்காக போயஸ் கார்டனில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா வீட்டை எடுத்து உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அறக்கட்டளை, ஆசிரமங்கள் தொடங்கி ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி அளித்து, அவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திய கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

GEM Veeramani Case Police Probe Reveals Shocking Details About Alleged Exploitation of Girls

ஜெம் வீரமணி

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வழக்கில், மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை ஆரம்பகட்ட விசாரணையில் அடையாளம் காண முடியாததால் போலீசார் வழக்கை முடிப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு நடத்திய மறுவிசாரணையில் சம்பவத்தின்போது சிறுமியாக இருந்த பெண் அடையாளம் காணப்பட்டார். அவரிடம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்

வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான 84 வயது தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஜெம் வீரமணி தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில் புழல் சிறையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழிலதிபர் ஜெம் வீரமணி தனது தொழில் பார்ட்னர்களுக்கு மதுபானங்களுடன் சிறுமிகளை சீரழித்ததும், இதற்காக போயஸ் கார்டனில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா வீட்டை எடுத்து உல்லாசமாக இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரமங்கள் மூலம்

தனது நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் மூலமாக சிறுமிகளை அழைத்து வந்து, போயஸ் கார்டன் பங்களாவில் வைத்து சீரழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

வீரமணிக்காக சிறுமிகளை அழைத்து வருவதற்காகவே, ஆதரவற்ற குழந்தைகள், ஏழ்மையான பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்ய அறக்கட்டளை ஒன்று தொடங்கினார். அந்த அறக்கட்டளை மூலம் அனாதை ஆசிரமங்கள் பல தொடங்கினார். அந்த ஆசிரமத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமிகள், இளம்பெண்கள் பலர் சேர்ந்தனர்.

போயஸ் கார்டன் பங்களாவில்

அங்கு சிறுமிகள், அழகான இளம்பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு துணிகள் மற்றும் செலவுக்கு பணம், செல்போன்கள் வாங்கி கொடுத்து வந்துள்ளனர். பிறகு அவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கான அனைத்து செலவுகளையும் தொழிலதிபர் வீரமணி செய்வார் என்று கூறி, சாந்தி மற்றும் அவரது கணவர் ஆகியோர் சிறுமிகளை போயஸ் கார்டனில் உள்ள பங்களா வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு மதுபானம் கொடுத்து வீரமணியுடன் உல்லாசமாக இருக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதுபோல பல ஆண்டுகளாக நடந்து வந்ததாகவும், தொழிலதிபர் வீரமணியின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளுக்கும் போயஸ் கார்டனில் உள்ள வாடகை பங்களாவில் சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை விருந்து வைத்துள்ளனர். அந்த வகையில் இதுவரை கணக்கில் தெரிந்த வகையில், சிறுமிகள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் என்று தொழிலதிபர் வீரமணி வாக்குமூலம் அளித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+