திடீர் உடல்நலக்குறைவு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, மற்றும் தொண்டையில் பிரச்சினை என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கே பாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். இந்த நிலையில் இன்று இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கே பாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கே பாலகிருஷ்ணனுக்கு சளி மற்றும் தொண்டையில் வலி ஏற்பட்டதாகவும், இதனால் அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? என்ற தகவல்கள் தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications