ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் பிடிப்பது அவ்வளவு ஈஸியில்லை.. அது தவம் சார்.. பாருங்க
சென்னை: ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் பிடிப்பது அவ்வளவு ஈஸியில்லை.. அதுவும் மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலோ, திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலிலோ, கோவை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலிலோ பொதுப்பெட்டியில் உட்கார இடம் பிடித்தால் அவர்களுக்கு அது வாழ்நாள் சாதனை தான்.. தமிழக ரயில்கள் மட்டுமல்ல பெரும்பாலான ரயில்களில் இதுதான் நிலை.. இந்த வீடியாவை பாருங்கள்..
இந்தியாவில் பயணங்களை பொறுத்தவரை, ஆம்னி பேருந்துகளிலோ அல்லது விமானங்களிலோ பயணிப்பதை நினைத்தே பார்க்க முடியாது. ரயிலில் செல்வது தான் பாதுகாப்பானது மட்டுமல்ல.. பட்ஜெட்டும் ஒத்துவரும். அரசு பேருந்துகளில் ஒருவர் பயணிக்கும் கட்டணத்தில் ஒரு குடும்பமே சென்னையில் இருந்து மதுரைக்கோ, கோவைக்கோ ரயிலில் போய்விட முடியும்.. ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் அதாவது முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணித்து ஊருக்கு சென்றால், நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக மக்களுக்கு போதுமான ரயில்கள் விடப்படுவது இல்லை.. இதன் காரணமாக பலருக்கும் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பது என்பது வரமாக இல்லாமல் சாபமாக இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கும், சொந்த ஊரில் இருந்து ஞாயிறு அன்று சென்னைக்கும் வருவது என்பது ஏழை மக்களுக்கு மிகவும் வலி மிகுந்த பயணம் ஆகும். இதேபோல் சுபமுகூர்த்த தினங்கள், தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்பட பல்வேறு பண்டிகைகளின் போது ஊருக்கு செல்வது என்பது எளிதானது அல்ல. அப்போது எல்லாம் ரயிலில் கால் வைக்க கூட இடம் கிடைக்காது.
After a long Struggle she got a place to SIT
— THE TRUTH SEEKER (@Unmai_Thedi) September 26, 2024
💔 pic.twitter.com/iQO8nFTgvP
கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் பிடித்த ரயில் பயணம், சுகமாக இல்லாமல் பெரும் சுமையாகவும், வேதனையாகவும் மாறி உள்ளது. படுக்கை வசதி பெட்டிகள் அதிகரிக்கப்படாதது, ஒவ்வொரு ஊருக்கும் தேவையான சாதாரண ரயில்களை இயக்காதது போன்ற காரணங்களால் ரயிலில் எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மக்கள் போதிய ரயில் சேவை வசதி இல்லாத காரணத்தால், கடும் நெரிசலில் உட்கார இடம் இல்லாமல் பல மணி நேரம் ரயில்களில் நின்று வருகிறார்கள்.
இந்நிலையில் ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் இல்லாமல் தவித்த பெண் பயணி ஒருவர், ஒருவழியாக போராடி இடம் பிடித்தார். ரயிலில் மேல் பகுதியில் கஷ்டப்பட்டு ஏறி அமர்ந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications