உலக வரலாற்றில் செஞ்சிக் கோட்டை.. பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ சர்ப்ரைஸ் அறிவிப்பு! விழுப்புரம் ஹேப்பி
சென்னை: தமிழ் நிலத்தில் மன்னர்கள் கட்டிய கோட்டைகளில் எஞ்சியிருக்கும் ஒரே அடையாளமாக திகந்து வரும் செஞ்சி கோட்டையானது, உலக புராதன சின்னமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுசம்பந்தமாக ஏற்கனவே யுனெஸ்கோ அமைப்புக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.. இது தமிழகத்துக்கே பெருமை சேர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது.. அத்துடன், ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையான அறிவிப்பாகவும் உள்ளது.. இதுகுறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக செஞ்சி கோட்டை விளங்கி கொண்டிருக்கிறது.. சோழர் காலத்தில், சிங்கபுரி என்று அழைக்கப்பட்ட இந்த பகுதிதான், நாளடைவில் திரிந்து செஞ்சி என்று மாறியது..

பெருமைகள் - சான்றுகள்
சோழர்கள் பலவீனம் அடைந்தபிறகு, ஆனந்தகோன் என்ற குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13ம் நூற்றாண்டில் நிறுவினார். பிறகு அதே 13ம் நூற்றாண்டிலேயே கோன் சமூக ராஜவம்சத்தால் ஆனந்த கோன் என்ற அரசரால் இந்த செஞ்சி கோட்டை கட்டப்பட்டது. புறகு கிருஷ்ண கோன் என்ற அரசர் இதனை விரிவுபடுத்தினார்.
3 பக்கமும் மலைகளால் சூழ்ந்து, சுமார் 13 கிலோ மீட்டர் சுற்றளவு, 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டிருக்கிறது இந்த கோட்டை... "இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை" என்று சத்ரபதி சிவாஜியே வாயார பாராடினார்;. அதேபோல, "கிழக்கின் ட்ராய்" என்று ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை புகழ்ந்தனர். கடந்த 1921ல் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, இறுதியாக தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் வந்து சேர்ந்தது.
சிறந்த சுற்றுலா தளம்
தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது.. ராஜா தேசிங்கின் இந்த கோட்டையில் தர்பார் மண்டபம், அந்தப்புரம், படைவீடுகள், யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், கோயில்கள், தானியக் களஞ்சியங்கள், ஆலயங்கள், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாளச் சிறை, மதில்சுவர், அகழி போன்ற அனைத்துமே நிறைந்துள்ளன.
இதனிடையே, இந்தியாவில் செஞ்சி கோட்டை உட்பட 12 இடங்களை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிற்கு மத்திய அரசு கடந்த வருடம் பரிந்துரை செய்திருந்தது.. இந்த பரிந்துரையில் தமிழகத்தில் இருந்து செஞ்சி கோட்டை மட்டுமே இடம்பெற்றது.
நினைவுச்சின்னங்கள்
இதனையடுத்து யுனெஸ்கோ அமைப்பினர் மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச ஆணைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கடந்த வருடமே செஞ்சிக்கோட்டையை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.. கோட்டையின் உறுதித் தன்மை, சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்தும் நேரடி ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில்தான், தற்போது யுனெஸ்கோவின் உலக புராதன சின்னங்களில் செஞ்சி கோட்டை இடம்பெற்றுள்ளது. மராத்தியர்களின் ராணுவ கட்டமைப்பை வெளிப்படுத்தும் வகையில் செஞ்சி கோட்டை அமைந்துள்ளதாக யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது..
அதாவது, நம்முடைய நாட்டிலுள்ள தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோலில், மாமல்லபுரம் சிற்பங்கள் என 42 இடங்கள் யுனேஸ்கோவின் பராம்பரிய அந்தஸ்தை பெற்றவையாக திகழ்ந்து வரும்நிலையில், அதே அங்கீகாரத்தை பெற்றுள்ளது, வரலாற்றின் சாட்சியமாக, 830 ஆண்டுகளை கடந்து நிற்கும் நம்முடைய செஞ்சி கோட்டை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications