தவெகவுடன் கூட்டணி.. ராகுல் சொன்னது என்ன.. கிரிஷ் சோடங்கர் அப்டேட்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. தவெகவுக்கு முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. தவெகவுக்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து கூட்டணியும் அமைத்துள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைத்தது பற்றி காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர் விளக்கமளித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பனையூரில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அப்போது அவர், "எங்கள் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜனா கார்கே, வேணுகோபால் ஆகியோருடன் ஆலோசனை செய்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முக்கிய முடிவு செய்துள்ளது. எங்கள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் இணைந்து தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளோம்.

தவெக ஆதரவு ஏன்
தவெக ஆட்சியமைக்க முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளோம். இதை சாத்தியப்படுத்தியதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் தலைவர்களுக்கு நன்றி. இதற்கான கடிதத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். எங்களை போல மேலும் சில கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்கு இது மிகவும் அவசியமாகிறது. கடிதம் கொடுத்தவுடன் ராகுல் காந்தியிடம் தெரிவித்தோம். அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
தவெகவுக்கு நாங்கள் வெளியில் இருந்து மட்டும் ஆதரவளிக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்கவுள்ள தவெக அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும். ஆட்சியில் நாங்களுகும் பொறுப்பெடுத்து மக்கள் நலனுக்காக செயல்படுவோம். மக்கள் நலம் தான் முக்கியம். முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். முதலமைச்சராக அவரின் பணி சிறக்க வாழ்த்துகள். ஆளுநர் விரைவில் ஆட்சியமைக்க அவரை அழைக்க வேண்டும்" என்று கூறினார்.
-
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!











Click it and Unblock the Notifications