சென்னை உயர் நீதிமன்ற மாடியில் இருந்து திடீரென குதித்த சிறுமி.. தற்கொலை முயற்சியால் பெரும் பரபரப்பு!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மாடியில் இருந்து சிறுமி ஒருவர் குதித்ததில் படுகாயம் அடைந்துள்ளார். ஆட்கொணர்வு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான அவரை, பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதால் கீழே குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையில் சிறுமியை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த அந்த சிறுமி, ஐகோர்ட்டில் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இன்று பிற்பகலில் முதல் மாடியின் மேலே இருந்து குதித்த சிறுமி, தரையில் விழுந்து படுகாயமடைந்தார்.
காயமடைந்த அந்தச் சிறுமியை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications