Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EXCLUSIVE: மாணவர்களுக்கு டிசி.. புதிய கல்விகொள்கையின் நீட்சி! டாஸ்மாக்க மூடுங்க -CFI மாணவர் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒழுங்கீனமான மாணவர்களுக்கு புகாரை குறிப்பிட்டு டிசி வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸின் அறிவிப்பு புதிய கல்விக்கொள்கையின் நீட்சி என கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

மாணவர்கள் வகுப்பறைகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் அவர்கள் செய்த தவறு குறித்து பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பின் மாநில தலைவர் அஸ்ரப் அவர்களின் ஒன் இந்தியா தமிழ் சார்பில் பேசினோம்.

அதற்கு பதிலளித்த அவர், சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு மாணவர்களுக்கு எதிரான, அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் விசயமாகவே பார்க்கிறோம் என்றார்.

மாணவர் விரோத அறிவிப்பு

மாணவர் விரோத அறிவிப்பு

தொடர்ந்து பேசிய அவர், "அமைச்சர் சொல்வதை போன்றே சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தன. ஆசிரியர்களை சில மாணவர்கள் மதிக்காமல் நடக்கின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதையெல்லாம் சரிசெய்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மாணவர்களுக்கு விரோதமானது. அதை முழுக்க முழுக்க நாம் கண்டிக்கிறோம். இதையெல்லாம் சரி செய்ய நிறைய வழிமுறைகள் உள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு வருவதே ஒழுக்கங்களை கற்பதற்குதான். பள்ளிக்கூடங்களே இப்படி மாறுகின்றன என்றால் அதற்கு மாணவர்கள் மட்டும்தான் காரணம் என்று சொல்வதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது.

அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

மாணவர்களாகவே இப்படி மாறுகிறார்களா? அல்லது பள்ளிகளை சுற்றி நடக்கக்கூடிய விசயங்கள் அவர்களை இப்படி மாற்றுக்கின்றனவா என்பதை நாம் பார்க்க வேண்டும். பள்ளிகள் அருகே போதை வஸ்துக்கள் வராமல் இருக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வழிதவறி செல்லக்கூடிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? இதுபோன்ற கேள்விகளை விட்டுவிட்டு டிசியில் புகாரை குறிப்பிட்டு மாணவர்களை இடைநிறுத்தம் செய்வோம் என்பது சரியான அணுகுமுறை அல்ல.

அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்

அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்

அரசு இதை உடனே வாபஸ் பெற வேண்டும். இதனால் நிறைய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இடைநிறுத்தம் அதிகரிக்கும். அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். நல்ல ஆசிரியர்கள் இதுபோன்று மாணவன் தவறே செய்தாலும் டிசியில் குறிப்பிட மாட்டார்கள். ஆனால், ஏதாவது ஒரு மாணவனை ஆசிரியர் பழிவாங்க நினைத்தால் அதற்கு இது ஒரு வழியாக அமைந்துவிடும். இன்று ஆசிரியர்களிடம் அத்துமீறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த தலைமுறையில் சினிமா மோகம், தொழில்நுட்பங்கள் முன்னேறியுள்ளன.

பாஜகவின் நிர்பந்தம்

பாஜகவின் நிர்பந்தம்

தமிழ்நாடு அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தொடக்கத்திலிருந்தே செயல்பட்டு வருகிறது. பாஜக இதை பிரச்சாரமாகவே முன்னெடுத்து தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை குறிவைத்து கல்வி சூழல் சரியில்லை என்று பரப்பி வருகிறது. அரசு பள்ளிகள் மீது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். ஆனால் இதுபோன்ற பிரச்சனை எல்லா பள்ளிகளிலும் உள்ளன. அரசு பள்ளிகளை குறிவைத்து அரசியல் ரீதியாக அழுத்தங்களை தருகிறார்கள். இது தெரியாமல் அரசு பதிலளிக்கிறோம் என்ற அடிப்படையில் யோசனையின்றி அவசர கெதியில் அறிவிப்பு வெளியிட்டதைபோல் தெரிகிறது.

அமைச்சர் தலைமை ஆசிரியர்போல் பேசலாமா?

அமைச்சர் தலைமை ஆசிரியர்போல் பேசலாமா?

மாணவர்கள் மீதே முழுக்க முழுக்க குற்றத்தை சுமத்தி அரசு நிர்வாகம் அதிலிருந்து நழுவிக்கொள்வதற்காக இதுபோன்ற உத்தரவை வெளியிடுகின்றனர். டிசி கொடுத்துவிடுவேன் என்பதை முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். ஆனால், தலைமையாசிரியர் இதை சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். கல்வி அமைச்சரே இவ்வாறு சொல்வதை சாதாரண விசயமாக கடந்துசெல்ல முடியவில்லை.

அரசு பள்ளிகளின் அருகே டாஸ்மாக்

அரசு பள்ளிகளின் அருகே டாஸ்மாக்

மாணவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக போதை பொருட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்க அரசுப் பள்ளிகளை சுற்றி குறிப்பிட்ட கிமீ தொலைவுக்குள் மதுபான கடைகள் இருக்கக்கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன. ஆனால், இதையெல்லாம் கடைபிடிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. போதைப் பொருட்களின் வகைகளும் அதிகரித்துள்ளன. இதெல்லாம் உள்ளூர் காவல்துறைக்கு தெரியாமல் நடப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அரசால் அதை தடை செய்ய முடியும். இதையெல்லாம் செய்யாமல் பாஜக போன்ற கட்சிகள் செய்யும் சூழ்ச்சிகளுக்கு பதில் கொடுக்கிறேன் என்ற பெயரில் கல்வி அமைச்சர் பேசி இருக்கிறார்.

பாலியல் தொல்லைகள்

பாலியல் தொல்லைகள்

பாலியல் சீண்டல்களால் மாணவிகளை துன்புறுத்தும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். இந்த புதிய அறிவிப்பு அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமா இல்லையா? ஆசிரியர்களின் அதிகாரம் அதிகமாகும்போது இதெல்லாம் வாய்ப்பாக அமையும். மாணவர்களை மையப்படுத்திய கல்வி தற்போது நடைமுறையில் உள்ளது. தற்போது மாணவ மாணவிகள் சாப்பாடு சரியில்லை, விடுதி சரியாக இல்லை, சத்துணவு சரியாக இல்லை என தங்களின் உரிமைகளுக்காக போராடும்போது அதை ஆசிரியர்கள் தடுக்கின்றனர்.

இப்படி இருக்க உரிமைகளுக்காக போராடும் மாணவர்களும் இதுபோன்ற உத்தரவுகளால் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி பள்ளியை விட்டு அனுப்ப முடியும். தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக்கொள்ளைகள் நடந்து வருகின்றன. இதனை கண்டித்து அங்குள்ள மாணவர்கள் யாராவது குரல் எழுப்பினால் டிசி கொடுத்துவிடுவோம் என்று சொல்வார்கள். அமைச்சரின் அறிவிப்பு இதெற்கெல்லாம் வழிவகை செய்யும் என்று சொல்கிறேன்.

புதிய கல்விக் கொள்கையின் நீட்சி

புதிய கல்விக் கொள்கையின் நீட்சி

புதிய கல்விக்கொள்கையில் ஆசிரியரை மையப்படுத்திய கல்வி வலியுறுத்தப்படுகிறது. அதில் ஆசிரியர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும். இந்த சூழலில் இதுபோன்ற உத்தரவுகள் புதிய கல்விக்கொள்கைக்கான முன்னோட்டமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. இதைவைத்து எப்படி வேண்டுமானாலும் மாணவ மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளது." என்றார் கவலையுடன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+