பாமக சட்டமன்றக்குழு தலைவர் ஜிகே மணி பதவி பறிப்பு.. இனி வெங்கடேஸ்வரன் தான்.. இறங்கி அடித்த அன்புமணி தரப்பு
சென்னை: பாமக சட்டமன்றக்குழு தலைவர் ஜிகே மணி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே பாலு தெரிவித்துள்ளார். மேலும் பாமக சட்டமன்ற குழு தலைவராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் ஒருமனதாக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸுக்கும் - அன்புமணி ராமதாஸுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தங்களையே அங்கீகரித்து இருப்பதாக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலு தெரிவித்துள்ளார்.

பாமகவில் தந்தை மகன் மோதல்
அதே நேரத்தில், ராமதாஸ் தரப்பும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டியுள்ளது. பாமகவில் தந்தை - மகன் இடையே நடைபெறும் உச்சக்கட்ட மோதலுக்கு இடையே, ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகளை அன்புமணி சேர்ப்பதாகவும் அறிவித்துள்ளார். பாமகவை கைப்பற்ற, ராமதாஸ் - அன்புமணி இருவரும் சட்டப்போராட்டத்திற்கும் ரெடியாகி வருவதை இருவரின் செயல்பாடுகள் காட்டுகின்றன.
இந்த நிலையில்தான், பாமக சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜிகே மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. ஜிகே மணி, ராமதாஸ் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிட்டது. பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும், கொறாடாவாகவும் ஜிகே மணி நியமனம் செய்யப்பட்டார்.
கே. பாலு செய்தியாளர் சந்திப்பு
பாமகவில் மொத்தம் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில், ஜிகே மணி மற்றும் அருள் ஆகியோர் மட்டுமே ராமதாஸ் பக்கம் உள்ளனர். ஏனைய மூன்று பேரும் அன்புமணி பக்கம் உள்ளனர். இந்த நிலையில்தான், ஜிகே மணியை சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கே. பாலு சட்டமன்ற செயலர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி கூட உள்ள நிலையில், அன்புமணி தரப்பு இந்த அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே. பாலு கூறியதாவது:
ஜிகே மணி நீக்கம்
சட்டமன்ற செயலாளரிடமும், சபாநாயகரின் தனிச் செயலாளரிடமும் இரண்டு கடிதங்களை கொடுத்துள்ளோம். நேற்று பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவராக தற்போது வரை செயல்பட்டு வந்த திரு ஜிகே மணி அவர்களை விடுவித்து, பாமக சட்டமன்ற குழு தலைவராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் ஒருமனதாக நியமிக்கப்பட்டார்.
சிவக்குமார் தேர்வு
துணை சட்டமன்ற குழு தலைவராக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் கொறடாவாக இதற்கு முன்பாகவே மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்யப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்த பிறகு பாமக அரசியல் தலைமை குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கப்பட்டு, தலைமை குழு ஒப்புதல் வழங்கி, அந்த கடிதத்தை இன்று சட்டமன்ற செயலாளரிடம் கொடுத்துள்ளோம்.
அருள் நீக்கம்
இன்னொரு கடிதம் ஒன்று என்னவென்றால், 3.7.2025 அன்று பாமகவின் விதிகளுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் செயல்பட்ட சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவரை கொறடா பொறுப்பிலிருந்து நீக்கி, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் சட்டமன்ற கொறடாவாக தேர்வு செய்து கடிதம் கொடுத்து இருந்தோம். அது குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், இது தொடர்பாகவும் கடிதம் கொடுத்து இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
-
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications