Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்! நவ 1 முதல் 4.0 பிரச்சாரம்! பென்ஷன்தாரர்களுக்கு குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா முழுவதும் 4.0 டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரத்தை, வரும் நவம்பர் 1 முதல் ஒரு மாதத்துக்கு, நாடெங்கும் உள்ள அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நேற்றைய தினம் 19 ஓய்வூதிய விநியோக வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை மதிப்பாய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

ஆயுள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் ஓய்வூதிய சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர் என்பதை உறுதிப்படுத்தும் ஆயுள் சான்று ஆவணமாகும்.

pensioners Digital Life Certificate jeevan pramaan

அந்தவகையில், ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ம் தேதி முதல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியதாரர்கள் சலுகை

ஆயுள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் ஓய்வூதிய சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர் என்பதை உறுதிப்படுத்தும் ஆயுள் சான்று ஆவணமாகும்.

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (டிஎல்சி) என்பது பயோமெட்ரிக் இயக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான ஆயுள் சான்றிதழாகும். இது அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் தரவை பயன்படுத்துகிறது.

இன்று இந்த செயல்முறை எளிதாகிவிட்டது. இன்று, ஜீவன் பிரமான் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அனுமதிக்கும் வகையில் இந்த அமைப்பு நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

ஆயுள் சான்றிதழ் - ஆவணங்கள்

இந்த சான்றிதழை ஓய்வூதியம் பெறுவோர் வீட்டிலிருந்தே பெறலாம்.. இதற்காக வங்கிகளுக்கு செல்ல வேண்டியதில்லை... ஜீவன் பிரமான் போர்ட்டல் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு செல்லாமல் எளிதாக ஜீவன் பிரமான் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஆயுள் சான்றிதழுடன், ஓய்வூதிய விநியோகத்தை உறுதி செய்வதற்கு பல்வேறு ஆவணங்கள் தேவையாக உள்ளது.. குறிப்பாக அடையாள சான்றிதழ், வயதுச்சான்று அதாவது ஆதார், வாக்காளர் ஐடி, பிறப்பு சான்றிதழ் அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் அட்டை போன்றவை தேவைப்படும்..

அதேபோல, குடியிருப்புச் சான்று, IFSC குறியீடு மற்றும் பாஸ்புக் நகல் உள்ளிட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான அறிவிப்பு மற்றும் ஓய்வூதியக் கட்டண ஆணை (PPO) எண் போன்றவையும் இதில் அடங்கும்.

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0

இப்படிப்பட்ட சூழலில் ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், "இந்தியா முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0-ஐ வரும் நவம்பர் 1 முதல் 30ம் தேதி வரை அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்த உள்ளது.

19 ஓய்வூதிய விநியோக வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை மதிப்பாய்வு கூட்டம் நேற்றைய தினம் ஓய்வூதிய செயலாளர் ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது.

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம்

இந்த கூட்டத்தில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 ன் செயல்திறன் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. Facial Recognition Technology அதாவது முக அங்கீகாரத் தொழில்நுட்பம் மூலம் பெறப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் உட்பட மொத்தம் 1.62 கோடி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் பெறப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி, மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கங்கள் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் 800-க்கும் அதிகமான மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் 1,900 முகாம்கள் நடத்தப்பட்டன.

2025 நவம்பர் மாதத்திற்கான தினசரி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை உருவாக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் முகாம்களை நடத்த திட்டமிடுதல் மற்றும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கே நேரடியாகச்சென்று சேவைகளை வழங்குதல் போன்ற அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் அறிக்கை தாக்கல் செய்வதற்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் தேசியத் தகவல் மையத்தின் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகளும் ஒப்புக்கொண்டனர்.

வங்கிகளும், இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கியும் 2025 அக்டோபர் மாதத்தில் இதற்கான விரிவான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. இதில் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் செயலி, சமூக ஊடகங்கள், பதாகைகள் மற்றும் உள்ளூர் ஊடகங்களைப் பயன்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+