Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி தித்திப்பு நியூஸ்.. ரம்ஜானுக்கு கோ-ஆப்டெக்ஸும் ஸ்பெஷல் ஆஃபர்.. குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், கைத்தறி மற்றும் விசைத்தறி ரகங்கள் அனைத்திற்கும் 30 சதவீத தள்ளுபடி விலையில், ஆடைகளை விற்கிறது. அதேபோல, 2 வாங்கினால் 1 இலவசம் என்ற சிறப்புத்திட்டத்தின் கீழ் கோ-ஆப்டெக்ஸின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் இன்று இந்த விற்பனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதேபோன்ற ஆஃபரை, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உள்ளிட்டவைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இதுபோன்ற பல ஆஃபர்கள், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தலப்பாகட்டி பிரியாணிக்கு பெரும்பாலான அசைவ பிரியர்கள் ரசிகர்களாக உள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அறிவிப்பானது, மகிழ்ச்சியை தந்து வருகிறது. இதனால், பிரியாணி ரசிகர்கள் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.

Dindigul Thalappakatti Biriyani Ramzan 10 offer

திண்டுக்கல் தலப்பாகட்டி ஓட்டலை பொறுத்தமட்டில் சென்னையில் மட்டுமே 28 இடங்களில் கிளைகள் உள்ளன... அதேபோல 12க்கும் அதிகமாக இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. இதைத்தவிர ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒரு கிளை உள்ளது. அனைத்து இடங்களிலும், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்ற பிராண்டிலேயே ஓட்டல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை ஈர்க்க ஸ்பெஷல் ஆபர் வெளியாகியிருக்கிறது.. திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நிறுவனத்தின் சார்பில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

சிறப்பு தள்ளுபடி

"ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களுக்கு, விதவிதமான உணவு சலுகை கொடுக்கிறோம். இப்போது ரம்ஜான் ஸ்பெஷல் ஆபர் வழங்குகிறோம். பார்ட்டி பேக்கில், ஒன்பது முதல் 10 நபர்கள் வரை சாப்பிடலாம். இதில், 10 வேக வைத்த முட்டை, 'சிக்கன் 65' இரண்டு போர்ஷன், 600 எம்.எல்., கோக், நெய் சாதம் மற்றும் பிரட் அல்வா வழங்கப்படும்.

ரம்ஜானை முன்னிட்டு கூடுதலாக, 10 சதவீதம் தள்ளுபடி விலையில், இவை கிடைக்கும். இந்த சலுகை, தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் உண்டு. இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட, திண்டுக்கல் தலப்பாகட்டிக்கு வாருங்கள்" என்று வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்..

கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை

அதேபோல, 90 வருட பாரம்பரியமிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30% சிறப்பு தள்ளுபடி மற்றும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை இன்று 31.3.2025 வரை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும் நடைபெறுகிறது. இதனுடன் ஆண்டு இறுதி விற்பனையையும் செய்கிறது.

இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட காட்டன் சேலைகள் காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆண்களுக்கான ரெடிமேட் சட்டைகள் ஏராளமாக முன்கூட்டியே வரவழைக்கப்பட்டிருந்தன.

சென்னை, மதுரை, கோவை

அந்தவகையில், சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான பர்வீன் சுல்தானா பங்கேற்று, ரம்ஜான் சிறப்பு தன்ளுபடி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

அதேபோல, மதுரை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, கோ-ஆப்டெக்ஸ்ரமலான் மற்றும் ஆண்டு இறுதி 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.

கோவையில் இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில், கிரசெண்ட் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி முதல்வர் ஜெயந்தி, துணை முதல்வர் சமீனாபானு மற்றும் ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இன்று அனைத்து கோ - ஆப்டெக்ஸ் கடைகளில், இந்த சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோ - ஆப்டெக்ஸ் அனைத்து மண்டலங்கள் சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+