கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன வரப்போகுது? 21 ஏக்கர் நிலத்தில் மாற்றம்? தமிழக அரசு மகிழ்ச்சி தகவல்
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு இருந்த இடத்தில் அடுத்து என்ன வரப்போகிறது என்ற ஆர்வம் சமீபகாலமாகவே எழுந்துள்ளது.. குறிப்பாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலியாக உள்ள 21 ஏக்கர் நிலத்தை அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவலை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது பொதுமக்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் புதிதாக திறக்கப்பட்டது. இதனால், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள 36 ஏக்கர் நிலத்தை அரசு என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கோயம்பேடு லுலு மால்
அப்போதுதான், கோயம்பேட்டில் லுலு மால் அமைக்க போவதாக தகவல்கள் பரபரத்தன.. உடனே பாமக தலைவர் அன்புமணி கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.. "வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில், மக்களுக்கு சொந்தமான நிலத்தை, பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்று காட்டமாக கூறியிருந்தார் அன்புமணி. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
அன்புமணியின் கோரிக்கைக்கு தமிழக அரசு எந்த பதிலையும் அப்போது சொல்லவில்லை என்றாலும், லுலு மால் கோயம்பேட்டில் அமைக்க உள்ளதாக கசியும் தகவலில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தது.
மக்களிடம் கருத்து கேட்பு
அதேபோல சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் சேகர்பாபு, "கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் ஒரு வருட காலத்திற்கு தேவைப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்திருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துகளை கேட்டறிவோம். பிறகு மக்களின் கருத்துக்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இறுதி முடிவினை எடுக்கும்." என்று கூறியிருந்தார்.
மக்களின் பயன்பாட்டுக்கு எந்த திட்டம் உதவுமோ அதனை செயல்படுத்துவோம் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்திருந்ததால், கோயம்பேட்டில் என்ன வரப்போகிறது? என்ற ஆர்வம் எகிறியபடியே இருந்தது.
கோயம்பேட்டில் என்ன வரப்போகிறது
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அப்போது, கேள்வி நேரத்தின்போது எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பேசும்போது, "கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலியாக உள்ள நிலத்தில் அரசு என்ன செய்யப்போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த துறையின் அமைச்சர் சேகர்பாபு, "கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள 21 ஏக்கர் நிலத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் எப்படி மாற்றுவது என்பது குறித்து வடிவமைப்பாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகி்றது. ஆய்வுப் பணிகள் முடிவடைந்த பிறகு உரிய முடிவு எடுக்கப்படும். மேலும் அங்கு உள்ள நான்கரை ஏக்கர் நிலம் மாநகரப் போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமானதாகும். அதில் 3 ஏக்கர் நிலத்தில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன,"என்றார்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications