நிலம் வைத்திருப்பவருக்கு ஹேப்பி.. நிலத்தின் சர்வே எண், பட்டா மொத்தமும் லைவ் லொகேஷனில்! வாவ் புது ஆப்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பட்டாவில் உள்ள பிழைகளை சரி செய்ய ஸ்பெஷல் வெப்சைட் தேவை என்று கோரிக்கைகள் எழுந்து வரும்நிலையில், புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.. அதாவது நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்கான வசதி கொண்டுவரப்பட உள்ளதாகவும், இதனால் துல்லியமான விவரங்களை பொதுமக்களால் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அது என்ன செயலி? அதன் பலன்கள் என்னென்ன?
சொத்துக்களை வைத்திருப்பவர்கள் தங்களது பட்டா ஆவணத்தில் ஏதாவது பிழைகள் இருப்பின் அதில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.. எனினும் பிழைகளை சரிசெய்ய விண்ணப்பிக்கும்போது, அவைகளை வருவாய் துறையில் கிடப்பில் போட்டுவிடுகிறார்களாம். இதற்கு சில வருவாய் கோட்டாட்சியர்கள், தங்களது வேலைப்பளுவை காரணம் காட்டுவதாகவும், இதனால் கட்டுமான திட்ட அனுமதி பணிகளில் பாதிப்பு எழுவதாகவும் சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

Land Owners Survey number Patta

புதிய இணையதளம் தேவை

இதுசம்பந்தமாக ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.தர்மராஜன் சமீபத்தில்கூட இதுகுறித்து வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.. அதாவது, "அடுத்தடுத்த பரிமாற்றம், வங்கி கடன், கட்டிட அனுமதி போன்றவற்றுக்காக செல்பவர்கள் மட்டுமே புகார் தருகிறார்களே தவிர, பெரும்பாலானோருக்கு இதுபோன்ற பிழைகள் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

எனவே, பிரத்யேகமாக வெப்சைட் ஒன்றை உருவாக்கினால், பொதுமக்கள் பலன் பெறுவார்கள்.. வருவாய் துறையிடமுள்ள பட்டா விபரங்கள் முழுவதையும் அதில் வெளியிட வேண்டும், பிழையான பட்டாக்கள் தொடர்பான சரியான விவரம் அடங்கிய ஆதாரங்களையும் விண்ணப்பதாரர்கள் அதில் அப்லோடு செய்ய வேண்டும்.. அதற்குபிறகு வருவாய் துறை அலுவலர்கள் பிழை திருத்தும் பணிகளை மேற்கொள்ளும்போது எளிதாக தீர்வு காணலாம். இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

நிலத்தின் சர்வே

இப்படிப்பட்ட சூழலில், நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி இருக்கிறதாம்.. ஏனென்றால், வருவாய் துறையின் ஆவணங்களிலும், குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் இதுதான் என்பதை துல்லியமாக கூற முடியாது. எனவேதான், ஸ்மார்ட் போன்களில் GPS, புவியிட தகவல் தொகுப்பு வசதியை, மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

உணவு உள்ளிட்ட பொருட்களை, டெலிவரி செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட நபரின் வீட்டை அடையாளம் காண்பதற்கும், இந்த வசதியை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.. இப்போது யார் எந்த இடத்தில் இருந்தாலும், செல்போனில் "லைவ் லொகேஷன்" ஷேர் செய்வதன் மூலம், இருக்குமிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள முடிகிறது.. இதை வைத்தே நிலத்தின் விபரங்ளையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.

ஸ்பெஷல் வெப்சைட்

Tamilnilam Gioinfo என்ற ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதில், கூகுள் மேப், சர்வே எண் விபரங்கள் உட்பட அனைத்துமே ஸ்கிரீனில் தெரியும்.. இதில், பிரதான சர்வே எண் உட்பட நிலத்தின் சர்வே எண் விபரங்களை துல்லியமாக அறியலாம். மேலும் ஏதாவது ஒரு பகுதியின் "அ"பதிவேடு, நில அளவை வரைபடம், பட்டா விபரம் போன்றவற்றையும் அறியலாம். இன்னும் சில மாதங்களில் இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, மக்களின் செயல்பாட்டுக்கு புதிய செயலி கொண்டு வரப்படும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+