ரேஷன்தாரர்களுக்கு நிம்மதி.. தமிழக அரசின் அடுத்தடுத்த சரவெடி.. ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு.. பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஜூலை மாதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், இன்னொரு அதிரடியும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் இயக்குநர் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதில், "ஜுலை மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக கடைகளுக்கு அனுப்பப்படாததால், குடும்ப அட்டைதாரர்களால் ஜுலை மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.

Ration Shops Ration Card Holders

குடும்ப அட்டைதாரர்கள்: குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜுலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் இந்த ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழகத்திலுள்ள 36,954 நியாயவிலைக் கடைகள் மூலம் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தையும், ரேஷன்தாரர்கள் கொண்டு வரும் பைகளில் மின்தராசு மூலம் எடையிடப்பட்டு வழங்கப்படுகிறது.

எடை குறைவு: ஆனால், இப்படி வழங்கப்படும்போது எடை குறைவாக இருப்பதால், பொது விநியோகத்திட்ட பொருட்களை பாக்கெட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. முதல்கட்டமாக, சேலம் மாவட்டம் ஸ்ரீரங்கபாளையத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.. பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் மற்ற பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்பட உள்ளது.

அதேபோல, .2.8 லட்சம் குடும்பத்தினருக்கு, புதிய ரேஷன் அட்டைகள் இம்மாதம் முதலே வழங்கப்படும்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடிகளுக்கு நடுவே, அடுத்த அதிரடியும் துவங்கப்பட்டுள்ளது.

கருவிழி பதிவு: ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது .. ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மேற்கொள்ளும் வகையில், முழு நேர ரேஷன் கடைகளுக்கு இயந்திரங்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. இப்போது கண் கருவிழி பதிவு இயந்திரம் வாயிலாக, ரேஷன் பொருட்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியாததால் கருவிழி பதிவு திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.. இதன்மூலம், விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிக்கல்கள்: அந்தவகையில், திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் இருந்ததால், இப்போது கருவிழி பதிவு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, முழு நேர ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் உள்ளது.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், புகார்கள் எதுவும் வரவில்லை என்று என குடிமைப்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+