Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரேஷன் கார்டில் திருத்தம் வேணுமா? சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப அட்டைதாரர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இப்போது மற்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே இதன்மூலம் பலனடைந்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

Ration Card Holders New Ration Cards

ரேஷன் கடைகள்: அதேபோல, ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஒரே வாரத்தில் மட்டும் 2 விதமான குட்நியூஸ்கள் வெளியாகியிருந்தன. அதாவது, ஏற்கனவே புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு, ரேஷன்தாரர்கள் காத்திருக்கும் நிலையில், விண்ணப்பித்த 2.8 லட்சம் குடும்பத்தினருக்கும் புதிய ரேஷன் அட்டைகள் இம்மாதம் முதலே வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலை கடைகள்: அதேபோல, நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை விநியோகம் செய்யும் நடைமுறையை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து சோதனை செய்யவுள்ளது. முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் ஒரு கடையில் பாக்கெட் மூலமாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டும் வருகின்றன. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் எடை குறைவாக இருப்பதாக வரும் குற்றச்சாட்டுகள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு: இந்த 2 அதிரடிகளுக்கு நடுவே, இப்போது சென்னையிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாதமும், மாநிலம் முழுவதிலும், ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்துக்கான குறை தீர்ப்பு முகாம் எப்போது என்கிற அறிவிப்பு தற்போது தெரிவித்துள்ளது..

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்த புகாா் தெரிவிக்கலாம். இதற்காக வருகிற 10ம் தேதி குறைதீா் கூட்டம் நடக்கவுள்ளது. இது குறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு இதுதான்:

குறைதீர் முகாம்: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான மாதாந்திர குறைதீா் முகாம் சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

நகரிலுள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடா்பான தகவல்களைப் பெறுவதுடன், குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம்.

எதிர்பார்ப்பு: மேலும், நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். அதனை அங்கீகரிக்கப்பட்ட நபா்களிடம் கொடுத்து நியாய விலைக் கடைகளில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+