குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்..ரேஷன் அட்டையில் உங்க பெயர் மாற்றணுமா? ரேஷனில் அதிரடி
சென்னை: குடும்ப அட்டைதாரர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இப்போது இன்னொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான பொதுமக்கள் நேரடியாகவே பலனை பெற்று வருகிறார்கள்..

தமிழக அரசு: அதேபோல, ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாதமும், மாநிலம் முழுவதிலும், ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நியாயவிலை கடைகள்: அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதத்துக்கான குறை தீர்ப்பு முகாம் எப்போது என்கிற அறிவிப்பை தற்போது தெரிவித்துள்ளது.. நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து, இந்த கூட்டத்தில், புகாா் தெரிவிக்கலாம். இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:
"பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 2024 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
ரேஷன் கார்டு பெயர் நீக்கம்: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகார சான்று: நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். அதனை அங்கீகரிக்கப்பட்ட நபா்களிடம் கொடுத்து நியாய விலைக் கடைகளில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications