அரிசி அட்டைதாரர்களே.. நியாய விலைக் கடைகளில் இனிமேல் "இதுவும்" கிடைக்குமா? ராகி ரெடி! அறிவிப்பு வருது
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், விரைவில் கூடுதலாக மற்றொரு பொருளையும் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதிலுமே, அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், தமிழக அரசும், ரேஷன் கடைகள் வாயிலாக கேழ்வரகு வினியோகிக்க முடிவு செய்தது..

இதையடுத்து, கடந்த வருடம்முதல், நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தவும் தமிழக அரசு முயன்றுவருகிறது.
கோதுமை: இதற்காக, தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளதால் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து வருடம் முழுவதும், கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு, இந்திய உணவு கழகத்திடம் தமிழக உணவு துறை அனுமதியை கேட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதுமட்டுமல்ல, கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு, மத்திய அரசின் சார்பில் 100 கிலோ எடை உடைய குவிண்டாலுக்கு, 3,846 ரூபாய் வழங்கப்படுவதால், ஈரோடு, சேலம் ஆகிய 2 மாவட்டங்களில் கொள்முதல் செய்யவும், ஆண்டு முழுதும் விவசாயிகளிடம் இருந்து, 17,000 டன் வாங்கவும் அனுமதிக்குமாறு மீண்டும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருந்தது.
கொள்முதல்: இதற்குதான் தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.. உடனடியாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், கேழ்வரகு கொள்முதலும் துவங்கியிருக்கிறது.. இதற்காக, நேரடி கொள்முதல் நிலையங்களும் துவக்கப்பட்டிருக்கின்றன.. இந்த வருட இறுதி வரை கொள்முதலை நீட்டிக்குமாறு தமிழக அரசு கோரிக்கையும் விடுத்திருந்த நிலையில், இதனை மத்திய அரசு தற்போது ஏற்றிருக்கிறது.
கடந்த டிசம்பரிலிருந்து இப்போதுவரை, மொத்தம் 730 விவசாயிகளிடம் இருந்து 1,290 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, இதற்காக, 4.35 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. எப்படிம் வரும் ஜூலைக்குள் கேழ்வரகு வரத்து அதிகரித்துவிடும் என்பதால், மத்திய அரசு நிர்ணயித்துள்ள அளவுக்கு கேழ்வரகு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
மகிழ்ச்சி: இதுவரை கேழ்வரகு கொள்முதல் 1,000 டன்னை தாண்டி, 1,290 டன்னாக உள்ளது... ஆகமொத்தம், மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க, ரேஷன் கடைகள் வாயிலாக, சிறுதானிய வகையைச் சேர்ந்த கேழ்வரகு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications