முக்கியமான பிரச்சனைகளை கவனிங்க.. வறுத்தெடுத்த வன்ம கும்பலுக்கு மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் பதிலடி!
சென்னை: ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை அடுத்து கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனை குறி வைத்து சிலர் எல்லை மீறி சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வினி ராமன்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனால், அதிருப்தி அடைந்த இந்திய ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பற்றி மோசமாக வசைபாடி வருகின்றனர்.

இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் கோப்பை கனவைச் சிதைத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற டிராவிஸ் ஹெட்டை வன்ம கமெண்ட் கும்பல் விட்டுவைக்கவில்லை. அபாரமாக ஆடி சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த அவரை இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களைத் திட்டுவதுடன், அவர்களின் குடும்பத்தினரையும் ஆபாசமாகப் பேசி வருகின்றனர். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வின்னிங் ஷாட்டை அடித்தவர் கிளென் மேக்ஸ்வெல். இவரது மனைவி வினி ராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 2013 முதல் நண்பர்களாக இருந்து, கடந்த 2020ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வினி ராமன், ஆஸ்திரேலிய அணி கோப்பை வென்றதைத் தொடர்ந்து வாழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், தோல்வி விரக்தியில் வீரர்கள் மீது வன்மத்தைக் கொட்டும் கும்பல், கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனை குறிவைத்து ட்ரோல் செய்து வருகிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் இப்படிச் செய்யலாமா என்றும் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கூறி சமூக வலைதளங்களில் மிரட்டல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். சிலர் வினி ராமனுக்கு பாலியல் ரீதியாகவும் மிரட்டல் விடுத்தும் பதிவிட்டுள்ளனர்.

அதற்கு வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலடி கொடுத்துள்ளார். "வெறுக்கத்தக்க இழிவான மெசேஜ்கள் வந்துள்ளன. தரமான கம்பீரமான ஆளாக மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்.. இதைச் சொல்லவேண்டுமா என நான் முதலில் யோசித்தேன். ஆனால் இதைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. நீங்கள் இந்தியராக இருந்தால், உங்கள் பிறந்த நாட்டை ஆதரிக்கலாம்.
பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. வயிற்றெரிச்சலை குணப்படுத்தும் மாத்திரையை எடுத்துக்கொண்டு, இந்த சீற்றத்தை மிக முக்கியமான உலகப் பிரச்சனைகளை நோக்கி செலுத்துங்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications