Coimbatore இல்லை Koyampuththoor.. 1018 ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல உச்சரிக்க, எழுத அரசாணை
சென்னை: ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.'
தமிழகத்தில் பல்வேறு ஊர்களின் பெயர்கள் தமிழில் ஒருமாதிரியும் ஆங்கிலத்தில் ஒரு மாதிரியும் உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக தூத்துக்குடியை tuticorin என்று அழைப்பார்கள். இனி தூத்துக்குடி என்று தான் அழைக்க வேண்டும். ஆங்கில உச்சரிப்பும் எழுத்தும் மாற்றப்படும்.

அதே போல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை எக்மோர் என்று அழைப்பார்கள். இனி அதை எழும்பூர் என்று தான் ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டும். தஞ்சாவூரை tanjore என்று அழைப்பார்கள். இனி அதை thanjavur என்று தான் அழைக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு ஊர்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் ஒரு உச்சரிப்பும், தமிழில் ஒரு உச்சரிப்பும் இருந்து வந்ததுள்ளதை அரசு மாற்றி உள்ளது. இனி தமிழ் உச்சரிப்பில் தான் ஊர்களின் ஆங்கில பெயர்களும் இருக்க வேண்டும், அத்துடன் தமிழ் உச்சரிப்பில் தான் ஆங்கிலத்தில் ஊர்களின் பெயர்களை எழுத வேண்டும் என்று தமிழக அரசு அரசாணையில் உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசாணையால் Trichy, Coimbatore போன்ற பல ஊர்களின் பெயர்களை தமிழில எழுதவும் உச்சரிக்கவும் வேண்டியது வரலாம்.
இதனிடையே தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் - KOYAMPUTHTHOOR, தூத்துக்குடி - THOOTHTHUKKUDI, தருமபுரி - THARUMAPURI, ஆலங்குளம் - AALANGGULAM, திருமுல்லைவாயல் - THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி - POOVIRUNTHAVALLI
மயிலாப்பூர் - MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை - CHINTHADHARIPETTAI சைதாப்பேட்டை - SAITHAAPPETTAI


Click it and Unblock the Notifications
