உடனே கிளம்புங்க.. தென் மாவட்டங்களில் நிலைமை மோசம்.. உடனே பறக்கும் தலைகள்.. ஸ்டாலின் போட்ட உத்தரவு
சென்னை: தென் தமிழ்நாட்டில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தென் மாவட்டங்களை நோக்கி அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதேபோல் விரைவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர்.
விடாமல் பெய்து வரும் கனமழையால் தென் மாவட்டங்கள் நீரில் மூழ்கி உள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
விடாமல் வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர்: தென் தமிழ்நாட்டில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தென் மாவட்டங்களை நோக்கி அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதேபோல் விரைவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் நெல்லைக்கு செல்ல உள்ளார். அவர் தற்போது சேலத்தில் உள்ளார். அங்கே திமுக மாநாட்டு பணிகளை நேற்று பார்வையிட்டார். இந்த நிலையில் விரைவில் அவர் நெல்லைக்கு செல்ல இருப்பதாக தகவ்லக்ள் வருகின்றன.
அமைச்சர்கள் உடனே நெல்லைக்கு புறப்பட வேண்டும், தென் மண்டல எம்பிக்கள் தென் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
( அந்த 15 நிமிடம்.. வானிலை மைய மீட்டரில் காட்டியது என்ன? வல்லுனர் சொன்ன ஷாக் அப்டேட்.. கவனம்!)
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு. அதி கனமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும். பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும். மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:
கன்னியாகுமரி - திரு. சு. நாகராஜன் இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர்.
திருநெல்வேலி- - டாக்டர் இரா. செல்வராஜ். இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
தூத்துக்குடி - திருமதி.பா.ஜோதி நிர்மலா இ.ஆ.ப., அரசு செயலாளர். வணிகவரித் துறை
தென்காசி - திரு.சுன்சோங்கம் ஜதக் சிரு, இ.ஆ.ப., அரசு செயலாளர். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை
ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்களும் சிலரும் விரைவில் நெல்லையை நோக்கி விரைய உள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications