Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 15 நிமிடம்.. வானிலை மைய மீட்டரில் காட்டியது என்ன? வல்லுனர் சொன்ன ஷாக் அப்டேட்.. கவனம்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கே விடாமல் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் 60 செமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

சென்னை ரெயின்ஸ்: இந்த மழை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு வெளியிட்ட கணிப்பில், நேற்று திருச்செந்தூரில் 606 மிமீ அளவில் மழை பெய்தது. விடாமல் 12 மணி நேரம் மழை பெய்தது. 12 மணி நேரத்திற்கு பின் ஒரே ஒரு 15 நிமிடம் அங்கே மழை இல்லாமல் இருந்தது. இதை 12 மணி நேரங்களுக்கு பின் இந்திய வானிலை மைய AWS கருவி பதிவு செய்துள்ளது. திருச்செந்தூர், திருநெல்வேலியில் வரும் நேரங்களில் மழை குறைந்தாலும்.. தூத்துக்குடியில் மழை நீடிக்கும்.

திருநெல்வேலி கடற்கரையின் தென்கிழக்கு அருகே புதிய வெப்பச்சலனம் உருவாகி வரும் வேளையில், இது மெதுவாக மேற்கு வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நஹ்கர்கிறது. மழையை பொறுத்தவரை இது கன்னியாகுமரிக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம், ஆனால் விருதுநகர் போன்ற இடங்களுக்கு மோசமான செய்தியாக இருக்கலாம்.

What is happening in Thirunelveli, Kanniyakumar, Tuticorin and other southern districts of Tamil Nadu?

அதிக மழை: இது மலை தொடர்ச்சிகளில் மிக அதிக மழையைக் காணக்கூடும். தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் இன்று இரவு வரை கண்காணிப்பில் இருக்க வேண்டும். இந்த பகுதியை நோக்கி புதிய மழை மேகங்கள்.. பட்டை பட்டையாக வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும். திருநெல்வேலி போன்ற பார்டர் ஏரியாக்களில் மழை பெய்யும்.

உள்ளே இருக்கும் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்யும், என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

( கோட் ரெட்! இனி இயற்கை பேரிடர்களுக்கு மத்தியிலே வாழணும்! ஐநா எச்சரித்தது போலவே தமிழ்நாட்டில் வெள்ளம் )

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லையில் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+