கோட் ரெட்! இனி இயற்கை பேரிடர்களுக்கு மத்தியிலே வாழணும்! ஐநா எச்சரித்தது போலவே தமிழ்நாட்டில் வெள்ளம்
சென்னை: தமிழ்நாட்டை அடுத்தடுத்து பெருவெள்ளமும், புயல்களும் அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளன. ஒரு வெள்ளம் முடிந்ததும் அடுத்த வெள்ளம் தாக்கி வருகிறது.
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
காலநிலை மாற்றம்: காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம்.
கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

ஆபத்து நிறைந்த எதிர்காலம்: எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும் என்று ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
சென்னை வெள்ளம்: இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டை அடுத்தடுத்து பெருவெள்ளமும், புயலும் தாக்கி வருகின்றன. 2015க்கு பின் இது போன்ற பெருவெள்ளம், புயல்கள் சாதாரண விஷயமாக மாறிவிட்டன.
ஐநா எச்சரித்தது போலவே தமிழ்நாட்டை அடுத்தடுத்து பெருவெள்ளமும், புயல்களும் அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளன. ஒரு வெள்ளம் முடிந்ததும் அடுத்த வெள்ளம் தாக்கி வருகிறது. தமிழ்நாடு கடலோர மாநிலம், தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலோரத்தில் இருப்பதால் இந்த தொடர் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
( வரலாற்றிலேயே அரிதாக நடக்கும் நிகழ்வு! தென் மாவட்டங்கள் நீரில் மூழ்கியது ஏன்? அது என்ன )
சென்னை வெள்ளம்: சமீபத்தில்தான் சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கியது. அதோடு மாபெரும் வெள்ளமும் ஏற்பட்டது. சென்னையையே இந்த வெள்ளம் முடக்கி போட்டது.
அதேபோல் தற்போது தென் மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை இதனால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அதிகனமழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 24 மணி நேரத்தில் பெய்த 2வது அதிகபட்ச மழைப்பொழிவாக இது பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி , திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அறிவித்தபடி மழை தொடர்ந்து பெய்து கொண்டிருகின்றது. வானிலை முன்னெச்சரிக்கையின்படி மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்படுகிறது இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications