ஆடு 1000.. எருமை 55,000, மனுஷன் விலை இவ்வளவுதானா? சீமான் வெளியிட்ட அதிர்ச்சி கணக்கு! #Election2026
சென்னை: ஒரு வாக்காளருக்கு 1000 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அதாவது 1825 நாட்களில் அந்தத் தொகை ஒரு நாளைக்கு வெறும் 54 காசுகள் மட்டுமே என்று நாம் தமிழர் கட்சி கூறுகிறது.. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாகக் கருதப்படும் 'வாக்குக்கு பணம்' கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துள்ள விழிப்புணர்வு முயற்சி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. இந்நேரத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் சில ஆயிரம் ரூபாய்கள், ஒரு சாதாரண மனிதனின் 5 ஆண்டுகால உரிமைகளை எவ்வாறு பறிக்கிறது என்பதை மிகத் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் நாம் தமிழர் கட்சியினர், மக்களிடம் எடுத்துச் சென்று வருகின்றனர்.

சீமான் - போஸ்டர்
இதற்காக அவர்கள் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பட்டியல், வாக்காளர்கள் தங்கள் வாக்கை விற்பனை செய்வதால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அந்த லிஸ்ட்தான் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
"ஓட்டுக்கு பணம் கொடுத்து வாங்குவோர் மற்றும் விற்போர் கவனத்திற்கு.. இன்றைய சந்தை மதிப்பு
எருமை மாடு ரூ.55,000,
பசு மாடு ரூ.45,000,
ஆடு ரூ.1000,
நாய் ரூ.5,000 முதல் 25,000,
பன்றி ரூ.5000 முதல் 15000
ஆனால் தேர்தலில் மக்களின் விலை ரூ.500 முதல் 2000 இது ஒரு பன்றியின் விலையைவிட குறைவு இதை சிந்தித்து பணம் பெறாமல் தன்மானத்துடன் வாக்களிப்பீர்" என்று நாம் தமிழர் கட்சியினர் போஸ்ட்ர் அடித்து ஒட்டி வருகிறார்கள்.
54 காசுகள் - தரமான கல்வி
அதாவது ஒரு வாக்காளருக்கு 1000 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது என்று எடுத்துக்கொண்டால், அந்த 5 ஆண்டுகால ஆட்சியில் (1825 நாட்கள்) அந்தத் தொகை ஒரு நாளுக்கு வெறும் 54 காசுகள் மட்டுமே ஆகிறது என்பதை அந்த பட்டியல் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு நாளுக்கு 54 காசுகளுக்காக உங்கள் குழந்தைகளின் தரமான கல்வி, இலவச மருத்துவம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சாலை வசதிகளை இழக்க நீங்கள் தயாரா? என்ற கேள்வியை அக்கட்சியினர் பொதுமக்களிடம் எழுப்புகின்றனர். அரசியல்வாதிகள் தேர்தலின் போது செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களை, அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊழல் மூலம் பல மடங்கு மீட்டெடுக்கிறார்கள் என்பதையும் இந்தப் பட்டியல் விளக்குகிறது.
மனித வளம் சுரண்டல்
குறிப்பாக, தமிழகத்தின் கடன் சுமை தற்போது 10.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் இலவசங்களையும் பணத்தையும் கொடுத்து மக்களை ஏமாற்றுவது ஒட்டுமொத்த மாநிலத்தையும் அடகு வைப்பதற்கு சமம் என நாம் தமிழர் கட்சி எச்சரிக்கிறது.
மதுபானக் கடைகள் மூலம் அரசு ஈட்டும் வருவாய், இறுதியில் மக்களின் உயிரையும் குடும்ப நிம்மதியையும் பறிக்கிறது என்பதையும், அதே பணத்தை மீண்டும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கே விநியோகிக்கும் அவலத்தையும் சீமான் தனது பிரச்சாரங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். காரைக்குடி தொகுதி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில், "மதுவினால் உயிரிழந்தவர்களின் உயிரையும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் நீங்கள் வாங்கும் 500 ரூபாய் ஈடுகட்டுமா?" என்ற கேள்வியை அவர் எழுப்பி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி போஸ்டர்கள்
மேலும், இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாக்குக்கு பணம் கொடுத்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
தெருக்களில் மறைமுகமாக பணம் விநியோகிக்கும் நபர்களைக் கண்காணிப்பதில் தேர்தல் ஆணையம் போதிய தீவிரம் காட்டவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டால், மக்கள் இவ்வாறான சொற்பத் தொகைக்காக தங்கள் வாக்குகளை விற்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதே நாம் தமிழர் கட்சியின் முக்கிய வாதமாக உள்ளது.
ஜனநாயகத்தை காசுக்கு விற்கும் செயலை நிறுத்தி, நேர்மையான வாக்குகளின் மூலம் மட்டுமே நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற இந்த விழிப்புணர்வு முயற்சி தற்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கிளைமேக்ஸ் இதுதான்.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று! வந்து குவிந்த 7400+ வேட்புமனுக்கள் -
“வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு.. 234 தொகுதிகளிலும் வெல்வோம்”.. கேட்டதுமே அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்! -
அமைச்சர் துரைமுருகன் சொத்து மதிப்பு எவ்வளவு.. மனைவி பெயரில் மட்டும் ரூ.59 கோடி சொத்து! -
மீண்டும் திமுக ஆட்சி.. மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்! கிட்ட கூட வராத விஜய்.. புது கருத்துக்கணிப்பு -
பொன்னேரியில் அந்த 1 நிமிடம்.. பேசிட்டே கதறி கதறி கண்ணீர் விட்ட பலராமனுக்கு தண்ணீர்.. ஒன்னும் புரியல -
"ஜாதி பார்த்து வேட்பாளர்.. விசுவாசிகளுக்கு சீட் இல்லை” சசிகலா கட்சிக்குள் கொதிப்பு! கடுப்பில் தலைகள் -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
கிளைமேக்ஸ் வந்தாச்சு.. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு.. பரபரக்கும் தேர்தல் களம் -
வெறும் ரூ.51,237 மட்டும் தான்.. இடும்பாவனம் கார்த்திக் - வீரப்பன் மகளின் சொத்து மதிப்பு இதுதான்! முழு விவரம் -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
சீமானுக்கு இங்கு ஓட்டு இல்லை! காரைக்குடிக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது - கார்த்தி சிதம்பரம் -
"எல்லாரும் வாபஸ் வாங்குங்கள்! என்னை ஜெயிக்க வைங்க!" போட்டி வேட்பாளர்களிடம் சுயேச்சை நூதன பிரச்சாரம்












Click it and Unblock the Notifications