1 ஆடு.. இவ்ளோ விலையா? ஆடி வரும் பின்னே, ஆடு விலை ஏறும் முன்னே.. பூ விலையும் உயர்வு.. அடேங்கப்பா
சென்னை: இன்று ஆடி வெள்ளி என்பதால் தமிழகம் முழுவதும் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.. காலை முதலே கோயில்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்று வருகிறது.
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்..

ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலி பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் இருப்பார்கள்.. ஆடி வெள்ளியில் சுமங்கலி பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும், மாங்கல்ய பலம் கூடும் என்பார்கள்.
ஆடி வெள்ளி: ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வரும்... இந்த ஐந்து வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பது சிறப்புக்குரியதாக கருத முடிகிறது.. அவ்வாறு விரதம் இருக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரே ஒரு வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடலாம்.
இந்த வருடத்தில் ஆடி மாதத்தில் இன்று ஆகஸ்ட் 2ம் தேதி வெள்ளிக்கிழமையாகும்.. இதையொட்டி பெண்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.. அம்பாளுக்கு பூக்களாலும், ஸ்தோத்திரங்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டு வருகிறார்கள்.
பூக்கள் விலை: இன்று ஆடி வெள்ளி, நாளை ஆடிப்பெருக்கு, நாளை மறுதினம் ஆடி அமாவாசை என அடுத்தடுத்து விசேஷங்கள் வருவதால், பூக்கள் விலை அதிகமாகி கொண்டே வருகிறது..
கடந்த வாரம் மல்லிகைப்பூ கிலோ, 500 ரூபாய், முல்லை கிலோ, 350 ரூபாயாக இருந்த நிலையில், மல்லிகை பூ கிலோ, 750 முதல், 800 ரூபாய், முல்லை, 450 முதல், 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.. அரளி, 150, செவ்வந்தி, 280, சம்பங்கி, 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும், சனி, ஞாயிறு விடுமுறையில், ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை வருவதால், விற்பனையில் பெருத்த அளவுக்கு லாபம் கிடைக்காது என்று சொல்கிறார் பூ வியாபாரிகள்.
ஆடுகள்: அதேபோல, ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்து வருகிறது.. தமிழ் மாதமான ஆடியில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், நேர்த்திகடன் செலுத்தும் வகையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதையும், கோயில்களுக்கு நேர்ந்துவிடுவதையும் பக்தர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
எனவே, இந்த மாதத்தில் ஆடு மற்றும் கோழிகளின் விலை பல ஆயிரம் ரூபாய்களை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்றுகூட 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகின. 1,000 ஆடுகளுக்கு மேல் கொண்டு வரப்பட்டன.
விற்பனை: எடையளவை பொறுத்து, 4,000 ரூபாய் -முதல், 30,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின... அந்தவகையில் ஆட்டுச்சந்தையில், 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் சொல்கிறார்கள். இதுபோலவே தமிழகத்தின் கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரித்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications