கோகுல்ராஜ் கொலை..குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த வழக்கறிஞருக்கு வாழ்த்துகள் - திருமாவளவன்
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க பாடுபட்ட வழக்கறிஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
Recommended Video
கடந்த 2015ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேருக்கு இன்று தண்டனையை நீதிமன்றம் அறிவித்தது.

கோகுல்ராஜ்
சேலம் மாவட்டத்தில் பொறியியல் படித்து வந்தகோகுல்ராஜ், வேறு ஜாதி பெண்ணை காதலித்த காரணத்தால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குற்றவாளிகளான யுவராஜ், அவரது கார் டிரைவர் ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் சாகும் வரை இருவரும் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்ற 8 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்துள்ளார். முன்னதாக இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என 5 பேர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர்
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக மோகன் வாதாடி, இந்த தீர்ப்பை பெற்றுத்தந்தார். அவர் கூறுகையில், ''கோகுல்ராஜை 9 மணிநேரம் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். அரிதிலும் அரிதான வழக்கு என கோர்ட்டில் கூறினோம். நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை
முதலாவதாக கொலை செய்தல், பட்டியல், பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் ஒரு ஆயுள் தண்டனையாகும். இதில் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும். இதற்கு 5 ஆயிரம் அபராதமாகும். 2வதாகாக குற்ற சதி செய்து பட்டியல் இனத்தவர் கொலை செய்ததாக இன்னொரு ஆயுள் தண்டனையும், 3வதாக ஆட்கடத்தி கொலை செய்ததால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதியை வழங்கிய நீதிமன்றத்துக்கு நன்றி. இந்த வழக்குக்காக எனக்கு எந்த உதவியும் அரசு தரப்பில் இருந்து கிடைக்கவில்லை. என்னுடைய பணத்தை வைத்து தான் இந்த வழக்குக்காக போராடினேன்'' என்று தெரிவித்தார்.

திருமாவளவன்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார். அதில், ''கோகுல்ராஜ் கொலை வழக்கில் வெற்றிகரமாக வாதாடி கொலையாளிகள் பத்து பேருக்கு வாழ்நாள் தண்டனை பெற்றுத் தந்த வழக்கறிஞர் ப. பா.மோகன் அவர்களுக்கு எமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது சட்ட அறிவும் இடதுசாரி சிந்தனைகளுமே இவ்வழக்கின் வெற்றிக்கு அடிப்படையாகும்'' என்று கூறியுள்ளார்.
-
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications