Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தங்கம் வாங்குவது என்பது வெறும் ஆடம்பரம் மட்டுமல்ல, அது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.. குறிப்பாக இல்லத்தரசிகள் தங்கள் சேமிப்பைத் தங்கமாக மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவர்.. இந்த சூழலில், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் தங்க நகை விற்பனையில் இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) சில அதிரடி மாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த உள்ளது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

இனி 6 இலக்கங்கள் கொண்ட HUID எனப்படும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக் கூடாது என்ற விதிமுறை மிகவும் கடுமையாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

இது குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள், தங்கள் பழைய நகைகளை விற்கவோ அல்லது மாற்றவோ செல்லும்போது சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்..

முக்கியமாக, நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பழைய தங்க நகைகளில் இந்த 6 இலக்க HUID எண் இருக்காது.. அந்த நகைகளை இப்போது விற்க நினைத்தால், நகைக்கடைக்காரர்கள் அதை வாங்குவதில் சில நிபந்தனைகளை விதிக்க வாய்ப்புள்ளது.

தங்கம் நகைகள்

அதனால்தான் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பழைய முத்திரையுள்ள நகைகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு சில நகைக்கடை சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.. எனவே, உங்கள் கையில் உள்ள பழைய நகைகளை மாற்றத் திட்டமிட்டிருந்தால், இந்த மார்ச் 31-க்குள் அந்த பணியை முடிப்பது புத்திசாலித்தனம்.. இல்லாவிட்டால், புதிய விதிமுறைகளின்படி உங்கள் பழைய நகைகளுக்கும் புதிய ஹால்மார்க் முத்திரை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்..

இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், தங்கத்தின் தரம் மற்றும் தூய்மையை உறுதி செய்யவே இந்த HUID முறை கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள 6 இலக்க சீக்ரெட் நம்பரை வைத்து, அந்த நகை எங்கே செய்யப்பட்டது மற்றும் அதன் தரம் என்ன என்பதை வாடிக்கையாளர்களே BIS Care எனப்படும் பிஐஎஸ் கேர் ஆப் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

சிறு நகையிலும் முத்திரை

ஏப்ரல் 1 முதல் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சிறு நகையிலும் இந்த முத்திரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.. இந்த முத்திரை இல்லாத நகைகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.. இது வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான விஷயம் என்றாலும், பழைய நகைகளை வைத்திருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்..

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.. மார்ச் 31 நிதியாண்டு முடியும் தருவாயில், பலரும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு வரி விதிப்புகளில் ஏதாச்சும் மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.. அதனால் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், இந்த 9 நாட்களுக்குள் வாங்குவது பாதுகாப்பானது என்கிறார்கள் நிபுணர்கள்.. விலை உயர்வு மற்றும் புதிய விதிமுறைகள் என இரண்டு பக்கமும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் என்பதால், இப்போதே சரியான முடிவை எடுப்பது நல்லது..

தங்கம் என்பது ஆபத்து காலத்தில் உதவும் ஒரு சொத்து என்பதால், அதில் எந்தவிதமான சட்டச் சிக்கல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.. உங்கள் நகைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லாவிட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் சென்டர்களுக்கு சென்று நீங்களே முத்திரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஒரு சிறிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

புதிய திருத்தங்கள் என்னென்ன

2023 முதல் 6 இலக்க எண் கட்டாயமாக்கப்பட்டாலும், பழைய 4 இலக்க முத்திரை கொண்ட நகைகளை விற்க நகைக்கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், இந்திய தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, தங்க நகைகளுக்கான கட்டாய ஹால்மார்க்கிங் திட்டத்தின் ஆறாவது கட்டத்தை மத்திய அரசு மார்ச் 2, 2026 அன்று அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய அரசாணையின் கீழ் பஞ்சாபின் ரூப்நகர், உத்தரப் பிரதேசத்தின் பண்டா, மகாராஷ்டிராவின் பீட், திரிபுராவின் கோமதி, பீகாரின் கதிஹார், ராஜஸ்தானின் பீவார் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் நீமுச் ஆகிய 7 கூடுதல் மாவட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் கட்டாய ஹால்மார்க்கிங் அமலில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 380-ஆக உயர்ந்துள்ளது.

6 இலக்க எண்கள்

இந்தத் திட்டம் நுகர்வோர் வாங்கும் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்வதையும், நகை வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, இந்த மாவட்டங்களில் உள்ள நகைக்கடைக்காரர்கள் 6 இலக்க HUID (Hallmark Unique Identification) எண் இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்ய அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களின் நகைகளில் உள்ள இந்த 6 இலக்க எண்ணை 'BIS Care செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், இதன் மூலம் தங்கத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும் என்றும் PIP செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+