சினிமா பாணியில் சென்னையில் செயின் பறித்த வடமாநில இளைஞர்கள்.. விமான நிலையம் புகுந்து தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரைக்குள் 8 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை கிண்டி, பெசன்ட்நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி என அடுத்தடுத்து 8 இடங்களில் ஒரே நேரத்தில் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தான் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதையடுத்து மும்பை தப்பி செல்ல முயன்ற அவர்களை விமான நிலையத்திற்குள் புகுந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இன்று காலையில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. அஜித்குமாரின் விவேகம் திரைப்பட பாணியில், ஒரு மணி நேரத்திற்குள் 8 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. நடைப் பயிற்சி சென்ற பெண்கள், கடைக்கு சென்ற பெண்கள், சாலையில் தனியாக சென்ற பெண்கள் என 8 பேரிடம், 8 வெவ்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தங்கச் செயின்களை பறித்து சென்றனர்.

திருவான்மியூர் பெண்
இந்த திருட்டில் கருப்பு நிற கர்நாடக பதிவு எண் கொண்ட வட மாநில இளைஞர்கள் 2 பேர் தான் ஈடுப்பட்டுள்ளதை கண்டறிந்த போலீசார் அவர்களை சென்னை விமான நிலையத்திற்குள் புகுந்து, மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்தனர். உத்தர பிரதேசம், சூரத்தை சேர்ந்த இளைஞர்கள் சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விவரம் வருமாறு:-
சென்னை திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பெண் இன்று காலை 6.00 மணியளவில் வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், திடீரென அந்த பெண் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
கிண்டியில் நிர்மலா என்ற பெண்ணிடம்
இதேபோன்று சென்னை கிண்டியில் இன்று காலை 6 மணியளவில், எம் ஆர் சி மைதானம் அருகே நிர்மலா என்ற பெண் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் நிர்மலாவின் தங்கச் செயினை பறித்து சென்றனர். அவரது தங்கச்செயின் 5 சவரன் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பெசன்ட் நகரில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு
பெசன்ட் நகர் சாஸ்திரி நகர் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் அம்புஜம் என்ற மூதாட்டி நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதில் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி செயினின் மறு பகுதியை பிடித்துக்கொண்டார். எனினும் அந்த நபர் மர்ம நபர் அரை சவரன் தங்க செயினை பிய்த்து கொண்டு சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
வேளச்சேரியில் மட்டும் 2 இடங்கள்
சென்னை வேளச்சேரி டான்சி நகர் பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் வித்யா என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் தனியாக வருவதை நோட்டமிட்ட அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், திடீரென வித்யாவின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்து சென்றனர். வித்யா சுதாரிப்பதற்குள் அந்த நபர்கள் தங்கச் செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேபோன்று வேளச்சேரியில் மற்றொரு பகுதியிலும் இன்று காலை 6.30 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் செயினை பறித்து சென்றதாக புகார் கூறியுள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முகமூடி அணிந்து இருந்தனர்
சைதாப்பேட்டையில் இந்திரா என்ற பெண் இன்று காலை 6.30 மணியளவில் வேலைக்கு கிளம்பி வந்தார். சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள தன் கடையின் முன்பு குப்பைகளை பெருக்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் செயினை பறித்து சென்றனர்.
இரண்டு பேரும் முகமூடி அணிந்திருந்ததாகவும், நான் குனிந்து பெருக்கிக் கொண்டிருக்கும் போது அம்மா என்று கூப்பிட்டு 4 சவரன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றதாக 50 வயது மதிக்கத்தக்க இந்திரா என்ற பெண் கூறியுள்ளார்.
வட மாநில இளைஞர்கள்
ஒரே நேரத்தில் 8 க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கச் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் இந்த ஒரே நேரத்தில் 8 இடங்களில் கைவரிசை காட்டியது வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் என்பது தெரியவந்தது. இதற்கு முன்பாக பொங்கல் தினத்தின் போதும் அவர்கள் பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளானது கர்நாடக பதிவு எண் கொண்டதாக இருந்தது. முன்பு போல் வெளிமாநிலம் தப்பி செல்வது தான் அவர்களது பிளானாக இருக்குமென்பதை தெரிந்துகொண்ட போலீசார் உடனடியாக சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் மூலம் தப்பி செல்ல இருந்தது தெரியவந்தது.
விமான நிலையத்திற்குள் புகுந்து கைது
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விமான நிலையத்திற்குள் புகுந்து வட மாநில இளைஞர்கள் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இருவரும் பெயரை கூட மாற்றி மாற்றி கூறினார்களாம். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னையில் இன்று ஒரே நேரத்தில் 8 இடங்களில் பெண்களிடம் மோட்டார் சைக்கிள்களில் வந்து நகைப்பறித்து சென்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் புகார் வந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications