Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க நகைக்கடன்.. 2 லட்சத்துக்காக காதலியை மாந்தோப்புக்கு ஜாலியாக அழைத்து போன நபர்.. பயங்கர ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகைக்கடன் 2 லட்சத்துக்காக ஆசை காட்டி, ஒரு பெண்ணை மாந்தோப்பிற்கு ஜாலியாக அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ஆன்லைன் சூதாட்ட போதையில் தனது சொந்த உறவினரையே காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய அந்த நபர், இறுதியில் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.. அந்த மாந்தோப்பு பயணம் இப்படி ஒரு பயங்கரத்தில் முடியும் என்று ஒருத்தருமே நினைக்கவில்லை. என்னாச்சு?

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்தபஞ்சானி மண்டலம் முத்தேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரம்மா (36).. இவர் தனது கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.. சந்திரம்மா அந்தப் பகுதியில் தையல் வேலை செய்து வந்ததோடு, ஏலச்சீட்டு நடத்துவது மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார்.

Gold For Loan 2 Lakh Debt Mango Grove Murder Jewelry Fraud Online Betting Crime Crime News 2

தங்க நகைக்கடன்

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (20) என்ற வாலிபருடன் சந்திரம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இருவரும் அடிக்கடி பைக்கல் சினிமா மற்றும் கோவில் திருவிழாக்களுக்குச் சென்று வந்துள்ளனர்.. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சுப்பிரமணியம், தன்னுடைய தேவைகளுக்காக சந்திரம்மாவிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற்றதாக தெரிகிறது.

நாட்கள் செல்ல செல்ல, தான் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு சந்திரம்மா, சுப்பிரமணியத்திடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.. எப்போது பார்த்தாலும் பணத்தை கேட்டு கொண்டிருந்ததால், சந்திரம்மா மீது கடுப்பாகி உள்ளார் சுப்பிரமணியம்.. அதனால் ஒரேடியாக சந்திரம்மாவைத் தீர்த்துக்கட்ட முடிவும் செய்தார்.

மாந்தோப்பு காதலி

இதற்காக தனது நண்பர்களான பிரசாத் மற்றும் நூர் அகமது ஆகியோருடன் இணைந்து ரகசியத் திட்டம் தீட்டினார்.. கடந்த மார்ச் 31ம் தேதி, "உனக்கு வரவேண்டிய பணத்தைப் பெற்றுத் தருகிறேன்" என்றும், "புதிதாக நகை வாங்கித் தருகிறேன்" என்றும் ஆசை வார்த்தை சொல்லி, சந்திரம்மாவை சுப்பிரமணியம் தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

வழியில் சிங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத மாந்தோப்பிற்கு சென்றபோது, அங்கு ஏற்கனவே காத்திருந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்திரம்மாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பிறகு சந்திரம்மாவின் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

வாடகை வாகனம்

கொலைக்கு பிறகு, ஆதாரங்களை மறைப்பதற்காக ஒரு பொலிரோ வாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்து, அதில் சந்திரம்மாவின் சடலத்தை ஏற்றிக்கொண்டு பலமநேர் அருகே உள்ள ஜகமர்லா காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அங்குள்ள முட்புதரில் சடலத்தைச் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் ஊருக்குத் திரும்பி உள்ளனர்.

இதனிடையே, சந்திரம்மாவை 2 நாட்களாகக் காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணையையும் ஆரம்பித்தனர்.. சந்தேகத்தின் அடிப்படையில் சுப்பிரமணியத்தைப் பிடித்தும் விசாரித்தனர்.. அப்போதுதான் அவர் அணிந்திருந்த சட்டையில் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்..

சித்தூர் ட்விஸ்ட்

உடனே போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை போட்டனர்.. பணத் தகராறு காரணமாகவே தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்திரம்மாவைக் கொலை செய்ததை சுப்பிரமணியம் ஒப்புக்கொண்டார்.

உடனே அவர் அடையாளம் காட்டிய இடத்திற்கு சென்ற போலீசார், காட்டில் வீசப்பட்டிருந்த சந்திரம்மாவின் சடலத்தை மீட்டனர்.. இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியம் உட்பட 3 பேரையும் கைது செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.. ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் ஒரு பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+