"தங்கம் வேஸ்ட்.. அதுக்கு வேல்யூ இல்லை!" இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்! ஆனா அடுத்த வரியை பாருங்க
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் இந்தளவுக்கு விலைமதிப்பு மிக்க பொருளாக மாற என்ன காரணம்.. தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்.. எந்தளவுக்குக் குறையும் என்பதைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
பெரும்பாலான இந்தியர்களுக்குத் தங்கம் மட்டுமே பிரதானச் சேமிப்பாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்குக் கவலையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. குறிப்பாகக் கடந்த 3, 4 ஆண்டுகளில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்திற்குப் போய் இருக்கிறது. இன்று கூட தங்கம் விலை உயர்ந்திருந்தது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து, ரூ 74,840-க்கு விற்கப்படுகிறது.. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ 9,355-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் தங்கத்தை வாங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
சிலர் வேறு சிலவற்றையும் அடுத்த தங்கம் என்கிறார்கள். உண்மையில் தங்கத்திற்கு ஏன் இவ்வளவு மதிப்பு இருக்கிறது. கடந்த காலங்களில் பொருளாதாரத்திற்குத் தங்கம் எந்தளவுக்கு முக்கியமானதாக இருந்துள்ளது என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
தங்கம் வேஸ்ட்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் மேலும் கூறுகையில், "தங்க மார்கெட்டில் இந்தியாவுக்குப் பெரிய இடம் இல்லை. ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே தங்கம் பிரதானமாக வெட்டி எடுக்கப்படும். தங்கத்திற்கு மதிப்பே இல்லை. அதற்கு எந்தவொரு பயனும் இல்லை. ஆனால், அது நமக்கு அரிதாகவே கிடைக்கும் என்பதாலேயே அதற்கு மதிப்பு இருக்கிறது. மேலும், தங்கம் எளிதாக நெகிழ்ந்து போகும் தன்மை கொண்டது. ஈஸியாக தங்கத்தை ஷீட்டாகவும் மாற்றலாம்.. விருப்பப்படி வளைத்தும் கொள்ளலாம்.
இதனால் தங்கத்தை ஈஸியாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்தக் காரணங்களால் தங்கத்திற்கு ஒரு மதிப்பு வந்துவிட்டது. கடந்த காலங்களில் தங்கம் இதனால் தான் கரன்சியாக பயன்படுத்தப்பட்டது. தங்கம் இதுபோல மதிப்பைச் சேமித்து வைத்திருக்கும். கடந்த காலங்களில் உப்பு, புகையிலை, சிகரெட் கூட கரன்சியாக யூஸ் செய்துள்ளனர். அதாவது எதாவது ஒரு விஷயம் மதிப்புமிக்கதாக இருந்தால் அது கரன்சியாக மாறிவிடும். எல்லாரும் பதுக்கிவிடுவார்கள். அப்படிப் பதுக்கும் பொருள் தான் தங்கம்.
100 மடங்கு உயர்வு
கடந்த காலங்களில் எல்லா கரன்சிக்களுக்கும் தங்கத்திற்கும் தொடர்பு இருந்தது. 1971 வரை தங்கத்திற்கும் கரன்சிக்கும் லிங்க் இருந்தது. அதன் பிறகே இந்த லிங்க் உடைந்தது. கடந்த 55 ஆண்டுகளாக மட்டுமே தங்கத்திற்கும் கரன்சிக்கும் லிங்க் இல்லாமல் இருக்கிறது. 1970களில் அன்று அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 36 டாலராக இருந்தது. இன்று அது 3300 டாலர் வரை வந்துவிட்டது. அது 3600 டாலர் வரை கூட போகலாம். அதாவது கடந்த 55 ஆண்டுகளில் தங்கம் விலை கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரித்துவிட்டது.
விலை குறையும்
அந்தளவுக்கு நாம் நோட்டுகளை அச்சடித்து இருக்கிறோம். டாலரில் 100 மடங்கு உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பில் அதை விட அதிகமாகவே எகிறியிருக்கிறது. நோட்டுகளை அடிக்கவில்லை என்றால் தங்கம் விலை தானாக குறைந்துவிடும். இதுபோல கடந்த காலங்களில் நடந்துள்ளதா என கேட்டால் ஆம் நடந்துள்ளது. 1970களில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. அதைக் கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. 20% வரை வட்டி போனது. இதனால் அப்போது தங்கம் விலை 800 டாலரில் இருந்து 200 டாலருக்கு போனது. இப்போதும் வட்டியை ஏற்றினால் தங்கம் விலை குறையும்" என்றார்.
விளக்கம்
அதாவது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்தும் தங்கம் விலை இருக்கும் என்பதே இவரது கருத்து. இப்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 4.25% to 4.50%ஆக இருக்கிறது. இதை மேலும் உயர்த்தினால் தங்கம் விலை சரியும். ஆனால், அதுபோல வட்டி விகிதம் உயர்ந்தால் அது பொருளாதார ரீதியாகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். பல லட்சம் பேருக்கு வேலையிழப்பும் ஏற்படும் ஆபத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications