தங்க நகைகளை நீங்க வாங்கணுமா? சுத்த தங்கம் எப்படி இருக்கணும் தெரியுமா? தங்கத்துக்கு சூப்பர் டிப்ஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வரும்நிலையில், தங்கத்தில் போலி நகைகளை உருவாக்குவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது.. அதுவும், ஒரிஜினல் போலவே, போலி தங்கத்தை தயார் செய்கிறார்கள்.. இதில் எது அசல்? எது போலி? என்பது என்பதை கண்டுபிடிப்பது தெரியுமா? கடைகளில் சென்று அறிந்து கொள்வதுபோல, வீட்டிலும் இதற்கென சில எளிய சோதனைகள் உள்ளன.. அவைகளை பார்ப்போம்.

தங்க நகைகளில் கவரிங் எது? நிஜமான தங்கம் எது? என்பதை கண்டுபிடிக்கவே முடிவதில்லையாம். அந்த அளவிற்கு தகிடுதத்தம் வேலை நடப்பதாக சொல்கிறார்கள்.

Gold Jewellery original gold

இந்த போலி நகைகள் எப்படி உருவாக்குவதை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.. முதலில் கவரிங்கில் நகையை செய்துகொண்டு, அதில், தகட்டில் தங்கத்தை கோட்டிங் செய்துவிடுவார்கள். இதுதான் பார்ப்பதற்கு அச்சுஅசல் தங்கம் போலவே இருக்கிறது. இதனால் மக்களை ஏமாற்றுவதும் மோசடிபேர்வழிகளுக்கு எளிதாகிவிடுகிறது.

எனவே, தங்க நகைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், நகை கடைகளில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நகைக்கடையில், அந்த நகையை உரசி பார்த்து, தரம், விலையை சொல்லிவிடுவார்கள்.

போலி நகைகள் இப்படி கவனியுங்க

அதேபோல, ஹால்மார்க் முத்திரை இருந்தாலும்கூட, ஹார்மார்க் சென்ட்டருக்கே சென்று, இதை பற்றி விசாரிக்க வேண்டும்.. அத்துடன், 916 முத்திரையுடன் நகைகளை வாங்குவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கிறார்கள். உங்களுக்கு நகை வாங்குவதில், விற்பதில் எந்த சந்தேகம் இருந்தாலும், பாரம்பரிய ஆசாரிகளிடம் அணுகினால் போதும்.

எனினும், தங்க நகைகள் அசலா? போலியா? என்பதை நாமும் சிலவழிவகைகளை பின்பற்றி வீட்டில் பரிசோதிக்கலாம்.. ஒரு பக்கெட்டில் தண்ணீரை ஊற்றி அதில், நகைகளை போட வேண்டும். அந்த நகை நீரில் மூழ்கினால், தங்கம் உண்மையானது என்றும், சிறிது நேரம் மிதந்தால், அது தங்கம் போலியானது என்று அர்த்தம். ஏனென்றால், தங்கம் எவ்வளவு லேசானதாக இருந்தாலும், அது எப்போதும் தண்ணீரில் மூழ்கிவிடும்.

வினிகர் ஜாக்கிரதை

தங்கத்தின் மீது வியர்வை பட்ட நிலையில், அதன் மீது வாசனை வீசுகிறது என்றால், அது கலப்படம் உள்ள தங்கம் என்று அர்த்தம். உண்மையான தங்கத்திற்கு வாசனையும் கிடையாது.

அடுத்ததாக, கிச்சனிலுள்ள வினிகர் மூலமும் தங்கத்தை அடையாளம் காணலாம். தங்க நகைகளில் சில துளிகள் வினிகரை தடவ வேண்டும்.. அந்த தங்கத்தின் நிறத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அது போலியானது. நிறத்தில் மாற்றம் இல்லையானால் அது உண்மை என்பதை புரிந்துகொள்ளலாம்.

நைட்ரிக் அமிலம் சோதனை

தங்கத்தை அடையாளம் காண நைட்ரிக் அமிலத்தை பயன்படுத்துவதும் ஒரு சிறந்த வழியாகும்.. தங்க நகைகளை துடைத்துவிட்டு, அதன் மீது ஒரு சில துளிகள் நைட்ரிக் அமிலத்தை ஊற்ற வேண்டும். தங்கத்தின் நிறம் பச்சையாக மாறினால் தங்கம் போலியானது.. ஏனென்றால், உண்மையான தங்கம் என்றால், அதன் நிறம் ஒருபோதும் மாறாது.

எனினும், அமிலம் மூலம் சோதனை நடத்தும்போது கவனமாக கையாள வேண்டும்.. இந்த அமிலம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+